SPONSER

Showing posts with label COMPUTER. Show all posts
Showing posts with label COMPUTER. Show all posts

Wednesday, 1 February 2017

மொபைல் போனுக்குப் புதியவரா! மொபைல் போன் பயன்களும் பாதுகாப்பும்

இணையப் பயன்பாடு நம் வாழ்க்கையை வளப்படுத்துவது ஒரு புறமிருக்க, அதனை விபத்துகள் சந்திக்கும் களமாகவும் ஹேக்கர்கள் மாற்றி வருகின்றனர். இதுவரை கம்ப்யூட்டர்களில் மட்டுமே இருந்த வைரஸ் ஆபத்து, மிக வேகமாக மொபைல் போன்களிலும் பரவி வருகிறது. மொபைல் போனில் பயன்படுத்தப்படும் இயக்க முறைமைகள், ஹேக்கர்களுக்கு எளிதாக வழிவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வியும், மொபைல் போன்களில் இயங்குவதற்கென கிடைக்கும் பாதுகாப்பு செயலிகள் அவ்வளவு வலிமையுள்ளனவாக அமைக்கப்படவில்லையா என்ற சந்தேகமும் தற்போது அனைவரின் மனதிலும் எழத் தொடங்கி உள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்துடன் ஒப்பிடுகையில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், வைரஸ்கள் பரவுவதற்கான வழிகளை அதிகமாகவே கொண்டுள்ளன என்பது உறுதியாகியுள்ளது.
 

 எனவே, அதிகம் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்ட் இயங்கும் ஸ்மார்ட் போன்களில், நாம் பாதுகாப்பு வழிகளைப் பலப்படுத்த வேண்டும் என்பதுவும் உறுதியாகிறது. இணையம் என்றாலே, நம் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுகிறது. எனவே, ஆண்ட்ராய்ட் சிஸ்டம் வழியாக, அது பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில், வைரஸ் புரோகிராம்களுக்கு எதிரான புரோகிராம்கள் கட்டாயம் பதிக்கப்பட்டு இயங்கப்பட வேண்டும் என்பதுவும் உறுதியாகிறது.
வெகுகாலமாகவே, வைரஸ் என்றாலே, அது நம் கம்ப்யூட்டர்களில் அதன் இயக்கத்தை கெடுக்கும் அல்லது முடக்கிப் போடும் ஒரு எதிரி என்பது நாம் அறிந்த ஒன்றாகும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், அது போன்ற கெடுதல் விளைவிக்கும் மால்வேர் தொகுப்புகள், நம் கம்ப்யூட்டரை முடக்கி வைத்து, பணம் கேட்டு மிரட்டும் ரேன்சம் வேர் (Ransomeware) மற்றும் நம்முடைய தகவல்களையே நாம் அணுக முடியாமல் செய்திடும் வைரஸ்கள் என அனைத்திற்கும் எதிரான செயல்பாட்டினை மேற்கொள்ளும் புரோகிராம்களாக உருவெடுத்துள்ளன. தற்போது, மொபைல் சாதனங்களுக்குமான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் பல கிடைக்கின்றன. இருப்பினும், மக்கள் மொபைல் போனுக்கு இது தேவையா என்ற அலட்சியத்துடன் இருப்பது, ஆபத்தினை உணர்ந்தவர்களிடம் ஒருவித பதற்றத்தினை ஏற்படுத்துகின்றது.
ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை நாம் இணையத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்; பல கட்டணம் செலுத்திப் பெறும் வகையிலும் கிடைக்கின்றன. இவை, பலவகையான பாதுகாப்பு வசதிகளைக் கொண்டவையாக உள்ளன.
பலர், மொபைல் போன்களில், நாம் எவற்றைப் பாதுகாக்க வேண்டும்? என்ற வினாவினை முன்வைக்கின்றனர். நாம் எங்கு சென்றாலும் நம் மொபைல் போன்களை எடுத்துச் செல்கிறோம். பல தனிப்பட்ட தகவல்கள் பலவற்றை அவற்றில் பதிந்து சேமித்து வைக்கிறோம். அவற்றில் சில முக்கிய டாகுமெண்ட்கள் இருக்கலாம். நாம் பங்கு கொண்ட விடியோக்கள், போட்டோக்கள், அரட்டையில் பகிர்ந்த தகவல்கள், கிரெடிட் கார்ட் தகவல்கள், இணையம் வழி பொருட்கள் வாங்கியது குறித்த தகவல்கள், நம் அஞ்சல்களுடன் அனுப்பிய இணைப்புகள் என்ற வகையில் பலவகையான தனிநபர் சார்ந்த ரகசிய பதிவுகள் இன்றைய மொபைல் போன்களில் நம்மால், சேவ் செய்து வைக்கப்படுகின்றன. இவை தவிர இன்னும் பல முக்கியமாகப் பதிவு செய்தவற்றை நாம் பாதுகாத்திட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


மொபைல் போன்களுக்கான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் என எண்ணுகையில் நம் கவனத்திற்கு வருபவை ~~ 360 Security, ESET, Kaspersky, Avast, Avira, Quickheal, AVG, Comodo, Norton, Symantec, Sophos மற்றும் McAfee ஆகியவை ஆகும். ஆனால், இவை தவிர, இன்னும் பல ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளும் உள்ளன. ஆனால், இவை அனைத்தையும், நம் மொபைல் போனில் பதிந்து ஒரே நேரத்தில் இயக்க முடியாது. ஏதேனும் ஒரு சூழ்நிலையில், நீங்கள் ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, போன் பாதுகாப்பிற்கென பயன்படுத்த வேண்டும். இது நீங்கள் எந்த வகை டேட்டாவினைப் பாதுகாக்க விரும்புகிறீர்கள் என்பதையும், எப்படி அவற்றைப் பாதுகாக்க விரும்புகிறீர்கள் என்பதையும் பொறுத்து உள்ளது. பொதுவாக, இந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் தரும் பாதுகாப்பு வசதிகள் குறித்துப் பார்க்கலாம்.


விரைவான தேடல்: மொபைல் போனில் உள்ள அனைத்து கோப்புகளையும், அவற்றில் வைரஸ் அல்லது மால்வேர் உள்ளதா என ஸ்கேன் செய்வது, பாதுகாப்பு வழங்குவதில் முதல் படியாகும். இதனை அனைத்து ஆண்ட்டி வைரஸ் செயலிகளும் தருகின்றன. மேலும், இவற்றைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் இயங்கி, போன் முழுவதையும் ஸ்கேன் செய்திடும்படி அமைத்திடவும் செய்திடலாம். ஸ்கேன் செய்வதனை வரையறை செய்தல்: போனை ஸ்கேன் செய்வதில், ஸ்கேன் செய்யப்படும் கோப்புகளை வகை செய்து அமைக்கலாம். போன் முழுவதையும் ஸ்கேன் செய்திடலாம். போனில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மட்டும் ஸ்கேன் செய்திட வழி அமைக்கலாம். மெமரி கார்டில் உள்ளனவற்றை மட்டும் எனவும், காலரி அல்லது டவுண்லோட் போல்டர்களை மட்டும் எனவும் வழி அமைக்கலாம். இதன் மூலம் நாம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் எவற்றை மட்டும் ஆய்வு செய்திட வேண்டும் எனக் குறிப்பிடலாம்.

பின்புலத்தில் ஆய்வு: இது ஒரு மெளனமாக இயங்கும் செயல்பாடு. நாம் மொபைல் போனைப் பயன்படுத்துகையில், போனின் வழக்கமான செயல்பாடுகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி, பின்னணியில், போனில் உள்ள அனைத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த செயல்பாடு, போனின் திரையின் முன்புறத்தில் காட்டப்பட மாட்டாது.

பாதுகாப்பு மற்றும் தனிவழிக்கான ஆலோசனை: இந்த வசதி, உங்கள் மொபைல் போனின் முழுமையான பாதுகாப்பு வழிகள் குறித்து உங்களை வழி நடத்தும். அத்துடன், இது பாதுகாப்புக்கு எதிரான வைரஸ் நடவடிக்கைகளைக் கண்காணித்து அறிவிக்கும். மேலும், போனில் இயங்கும் அப்ளிகேஷன்கள் சார்ந்த பழைய தேவைப்படாத டேட்டாவினை அழிக்கும். மேலும், ஏதேனும் டேட்டா கரப்ட் ஆகிப் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தால், அவற்றையும் நீக்கும். போனில் இயங்கும் அனைத்து அப்ளிகேஷன்களையும் சோதனை செய்து, அவற்றில் கெடுதல் விளைவிக்கும் செயலிகள் ஏதேனும் கெடுத்துள்ளதா எனக் கண்டறியும். நம் தனிநபர் தகவல்கள் திருடப்படும் ஆபத்தில் உள்ளனவா என்பதனையும் ஆய்வு செய்து கண்டுபிடிக்கும்.

ஆண்ட்டி வைரஸ் செயலியை மேம்படுத்தல்: எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பானாலும், அது பதியப்பட்டு, செயல்படுகையில், அதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனம், புதியதாகப் பரவி வரும் வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பு குறியீடுகளுடன், அதனை மேம்படுத்தும். இந்த மேம்படுத்தலை, நம் போனில் உள்ள ஆண்டி வைரஸ் புரோகிராம் தானாகவே ஏற்றுக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் நாம் அமைக்க வேண்டும். இந்த வசதி அனைத்து ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலும் தரப்பட்டுள்ளது.

தன் அடையாளத் தகவல் பாதுகாப்பு: இந்த வசதியை அனைத்து ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களும் கொண்டுள்ளன. இதன் மூலம், மொபைல் போனிலிருந்து, நம் மின் அஞ்சல்கள் திருடப்படுகின்றனவா என்பது முதல், நம் ரகசிய தகவல்கள் கடத்தப்படுகின்றனவா என்பது வரையிலான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

செயல் வேகம் அதிகரிப்பு: மொபைல் போனை அச்சுறுத்தும் வைரஸ் நீக்கம், தேவையற்ற பைல்கள் நீக்கம் மற்றும் கெட்டுப் போன டேட்டா நீக்கம் ஆகியவற்றினால், போனின் செயல் திறன் வேகம் அதிகரிக்கிறது. இதனால், மொபைல் போன்களில் தரப்பட்டுள்ள பேட்டரிகளின் வாழ்நாள் நீடிக்கிறது.

திருட்டுக்கு எதிரான பாதுகாப்பு: இந்த வசதி பெரும்பாலும், கட்டணம் செலுத்திப் பெறும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் மட்டும் தரப்படுகிறது. உங்கள் மொபைல் போனை, திருடன் ஒருவன் கவர்ந்து செல்கையில், அதில் உள்ள டேட்டாவினை, இந்த வசதியின் மூலம் முழுமையாக போனில் இருந்து நீக்கிவிடலாம். இந்த செயல்பாடு பல வழிகளில் மேற்கொள்ளப்படுகிறது. உங்கள் போனுடைய லாக் பாஸ்வேர்டினை, போனை எடுத்த திருடன், இரண்டு முறை தவறாக உள்ளீடு செய்தால், உடனே, போனின் முன்புறத்திலும், பின்புறத்திலும் உள்ள கேமராக்கள், அந்த திரைத்தோற்றத்தினை ஸ்கிரீன் ஷாட் காட்சியாகப் பதிவு செய்கின்றன. இது, போனை எடுத்தவனையும் மற்றும் அவன் இருக்கும் இடத்தினையும் பதிவு செய்கிறது. இதுவும் கட்டணம் செலுத்திப் பெறும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் உள்ளது.

போன் இருக்கும் இடம் அறிதல்: இது முன்பு கட்டணம் செலுத்திப் பெற்ற புரோகிராம்களில் மட்டுமே காணப்பட்டாலும், கூகுள் ஆண்ட்ராய்ட், பயனாளர்கள் அனைவருக்கும் இந்த வசதியைத் தனி வசதியாகத் தருகிறது. உங்கள் போனை நீங்கள் தொலைத்துவிட்டாலோ அல்லது வைத்த இடத்தினை மறந்துவிட்டாலோ, இணையத்தில், இந்த அப்ளிகேஷனுக்கான இணைய தளம் சென்று, அது தரும் வழிகளில் தேடினால், போன் இருக்கும் இடத்தில் வரைபடம் காட்டப்படுகிறது. அத்துடன், இந்த செயல்முறை வழியாகவே, உங்கள் போனை உங்களால் லாக் செய்திட முடியும் மற்றும் டேட்டாவினை அழிக்க முடியும். Avira போன்ற ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள், போன் இருக்கும் இடத்தை இந்த வசதி மூலம் அறிந்தவுடன், மிகப் பெரிய அளவில் ஒலி எழுப்பும் வசதியையும் கொண்டிருக்கின்றன. மேலும், அந்த போன் திருடப்பட்டுவிட்டதென, திரையில் செய்தியையும் காட்டுகின்றன. இதனால், சுற்றி இருப்பவர்களின் கவனம் அந்த திருடப்பட்ட போனின் பால் ஈர்க்கப்படுகிறது.

உங்கள் மொபைல் போனை எப்படிப் பாதுகாக்கலாம்?
நம்பத் தகுந்த தளத்திலிருந்து கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு ஒன்றை போனில் தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளவும். எடுத்துக் காட்டாக, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்கு, கூகுள் ப்ளே தளம் பல்வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை வழங்குகிறது. அது மட்டுமின்றி, குறிப்பிட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், அதிகார பூர்வ அனுமதி பெற்றதுதான் எனச் சான்று அளிக்கப்படுகிறது. போனில் பதிவதுடன் நின்றுவிடாமல், அதனை அவ்வப்போது மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான், புதிது புதிதாய் வரும் வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
இணையத்தில் உலா வருகையில், பாப் அப்கள் மூலம் உங்களுக்குக் காட்டப்படும் லிங்க்குகளில் கிளிக் செய்து மாட்டிக் கொள்ளக் கூடாது. இவை பெரும்பாலும் வைரஸ் புரோகிராம்களை அனுப்பும் தளமாகவே இருக்கும். உங்களுடைய வை பி இணைய இணைப்புகளும் பாதுகாக்கப்பட்டவையாக இருப்பதையும் உறுதி செய்திடுங்கள். பலர், நமக்கு இலவசமாகக் கிடைக்கும், பொதுவான வை பி இணைப்புகள் நம் டேட்டா கட்டணத்தை மிச்சப்படுத்தும் என எண்ணுகின்றனர். ஆனால், இவற்றின் மூலம் நாம் எளிதாக வைரஸ்களைப் பெறும் வழிகளும் திறக்கப்படுகின்றன என்பதை அறியாமல் இருக்கிறோம்.


மாறி வரும் உலகில், நம் வாழ்வில், முக்கிய அங்கமாக, மொபைல் போன் பயன்பாடும், அதன் வழி இணைய அணுக்கமும் மாறிவிட்டது. எனவே, வாழ்வின் இந்த வழியை நாம் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மேற்குறிப்பிட்ட தேவைகளும், அதனைப் பாதுகாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய வழிகளும் நமக்கு அவசியமாகின்றன. அவற்றைப் பின்பற்றுவதே நம் பாதுகாப்பினை உறுதி செய்திடும்.

விண்டோஸ் 10: இசை இயக்கும் செயலிகள்

சில ஆண்டுகளுக்கு முன்பு, விண்டோஸ் இயக்கத்தில் எந்த இயக்க முறைமையினைப் பயன்படுத்தி வந்தாலும், 'விண் ஆம்ப்' (WinAmp) என்னும் புரோகிராம் பாடல்கள் கேட்க பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் பின் வந்த பல செயலிகள், விடியோ மற்றும் ஆடியோ பைல்களை இயக்கப் பல வசதிகளுடன் இலவசமாகக் கிடைத்ததால், விண் ஆம்ப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இறுதியில், அந்த நிறுவனமே, அதனை இணையத்திலிருந்து நீக்கிவிட்டது. இன்னும் பழைய விண்டோஸ் 98, விண்டோஸ் எக்ஸ்பி இயக்கமுறைமை உள்ள கம்ப்யூட்டர்களில், சிலர் விண் ஆம்ப் செயலியைப் பயன்படுத்துவதனைக் காணலாம்.

                                        


தற்போது பயன்பாட்டில் உள்ள விண்டோஸ் 10 இயக்க முறைமையில், அதன் தொழில் நுட்பத்தினை அதிக பட்சம் பயன்படுத்தக் கூடிய பல இசை செயலிகள், இணையத்தில் கிடைக்கின்றன. பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, விண்டோஸ் 10 மொபைல் சாதனங்களுக்கெனவும் சில நல்ல செயலிகள் கிடைக்கின்றன. அவற்றை இங்கு காணலாம். நம் பாடல் கோப்புகளை தேக்கி வைத்து, நிர்வகித்து, விரும்பும் போது கேட்டு மகிழ இவை நமக்கு உதவுகின்றன. இத்தகைய செயலிகள் பல இருந்தாலும், சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட, பயனாளர்கள் பலரால் பயன்படுத்தப்படுகின்ற செயலிகளை இங்கு பார்ப்போம்.

குரூவ் மியூசிக் (Groove Music): 'குரூவ் மியூசிக்' என்னும் இசை செயலி, மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் 10 பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 10 மொபைல்களிலும், இயக்க முறைமையுடன் பதியப்பட்டு தருவதாகும். நம் இசைக் கோப்புகளை நிர்வகிக்க நல்ல இடைமுகத்தினைத் தருவதுடன், இசைக் கோப்புகளைப் பெற, விண்டோஸ் ஸ்டோருக்கான இணைப்பினையும் தருகிறது. விண்டோஸ் ஸ்டோரில் நம் இசைக் கோப்புகளை சேவ் செய்து வைத்து, விரும்புகையில் எடுத்துப் பயன்படுத்தும் வசதியும் கிடைக்கிறது. எனவே, நம் இசை விருப்பத்திற்கு இது நல்லதொரு தேர்வாக அமைகிறது. இருப்பினும், வேறு சில செயலிகளையும் காணலாம்.

பெர்பெக்ட் மியூசிக் (Perfect Music): Perfect Thumb நிறுவனம், விண்டோஸ் 10 இயக்க முறைமைக்கென பல செயலிகளை வழங்குகிறது. இசையை அனுபவிக்க, விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்தில் இயங்க இந்த செயலியை அளிக்கிறது. இதனை இயக்குகையில், போனை அசைத்தே, இதன் இயக்கத்தினைக் கட்டுப்படுத்தலாம். இந்த செயலி, FLAC, M4A, WMC, WAV, மற்றும் MP3 ஆகிய வடிவங்களில் அமைந்த கோப்புகளை இயக்குகிறது. பாடல் எழுதியவர், பாடல் வகை, ஆல்பங்கள் மற்றும் பாடல்கள் என வகை பிரித்து இவற்றை அறியலாம். பாடல்களை அகர வரிசைப்படியும் தேடிப் பெறலாம். இதனை இலவசமாகப் பெறலாம். இயக்கப்படுகையில் விளம்பரங்கள் குறுக்கே வரும். அவை வராமல் இசையை அனுபவிக்க வேண்டும் எனில், கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இதனை உங்கள் விண்டோஸ் போனுக்கு தரவிறக்கம் செய்திட, https://www.microsoft.com/en-in/store/p/perfect-music/9nblgggzm6cv

 என்ற தளத்திற்குச் செல்லவும். அல்லது விண்டோஸ் ஸ்டோர் சென்று தேடிப் பெறலாம்.

ஸ்பாட்டிபை (Spotify):
விண்டோஸ் 10 மொபைல் போனுக்கென வடிவமைக்கப்பட்ட செயலி. இசையின் பல்வேறு படிவங்களை (rock, classical, blues, country, metal மற்றும் பல) இயக்குகிறது. அத்துடன், இசை வானொலி நிலையங்களையும் இணைக்கிறது. ஆடியோபுக் பலவற்றிற்கு இணைப்புகளைத் தருகிறது. இதுவும் இலவசமாகவே கிடைக்கிறது. நம்மைப் பற்றிய தகவல்களைப் பதிந்து இதனை இறக்கிப் பதிந்து கொள்ளலாம். சிறிது கட்டணம் செலுத்தினால், உயர் நிலை பதிப்பு ஒன்றினைப் பெறலாம். இருப்பினும், இலவசமாகப் பெறப்படும் செயலியே நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதால், இதனையே பலரும் பயன்படுத்துகின்றனர். இதனை விண்டோஸ் ஸ்டோரிலிருந்து பெறலாம். http://target.georiot.com/Proxy.ashx?TSID=15093&GR_URL=https%3A%2F%2Fwww.microsoft.com%2Fen-us%2Fstore%2Fp%2Fspotify%2F9wzdncrfj4wk&o என்ற முகவரிக்குச் செல்லவும்.

வி.எல்.சி. மீடியா பிளேயர்: விண்டோஸ் 10 பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் என இரண்டுக்குமாய் மட்டுமின்றி, விடியோ மற்றும் ஆடியோ பைல்களைத் திறம்பட இயக்கும் செயலாற்றல் கொண்டது இந்த செயலி. பாடலைப் பாடியவர், இசை அமைத்தவர், பாடல் அகரவரிசை, பாடல் பட்டியல் எனப் பல வகைகளில், இசைக் கோப்புகளை வகைப்படுத்திப் பெற்று அனுபவிக்கலாம். இதன் தோற்றத்தினையும் பல வகைகளில் அமைக்க கருப்பொருள் உரு தரப்படுகிறது. டைட்டில் பார், வண்ணக் கலவை, விடியோவினை மீண்டும் மீண்டும் இயக்க, ஒலிக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கான அமைப்புச் சாதனம் மற்றும் Last.fm தளத்துடன் இணைத்துக் கொள்ள வசதி எனப் பல்முனைச் செயல்பாடுகளை இந்த செயலி தருகிறது. இது முற்றிலும் இலவசமே. கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் மட்டுமின்றி, எக்ஸ்பாக்ஸ் ஒன் (Xbox One) சாதனத்தில் இயக்குவதற்கான பதிப்பும் கிடைக்கிறது. இதன் பலதரப்பட்ட வசதிகளுக்காகவே, பெரும்பாலான பயனாளர்களால் இது பெரிதும் விரும்பப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தரவிறக்கம் செய்திட http://www.vlc-player-download.com/

 என்ற இணைய தளம் செல்லவும். (இது மேக் கம்ப்யூட்டருக்கான பதிப்பையும் கொண்டுள்ளது. விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கான 32 மற்றும் 64 பிட் என இருவகை பதிப்புகளையும் தருகிறது)

பண்டோரா (Pandora): வி.எல்.சி. பிளேயரைப் போலவே, பண்டோரா செயலியும், விண்டோஸ் 10 பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன் மற்றும் எக்ஸ் பாக்ஸ் ஒன் என அனைத்து சாதனங்களுக்குமான பதிப்புகளைக் கொண்டுள்ளது. இணையத்தில் இயங்கும் ரேடியோ நிலையம் இது. உங்களுக்குப் பிடித்தமான ஓர் இசைக் கலைஞரின் பெயரைக் கொடுத்தால், அவர் சார்ந்த பாடல்களுக்கென தனியே ஒரு இசை நிலையத்தை உருவாக்கித் தரும்.
இந்த செயலி பல இசை நிலையங்களைக் கொண்டுள்ளது. இதிலிருந்து நாம் விரும்பும் வகை இசைக் கோப்புகளைப் பெற்று இயக்கலாம். இலவசமாக இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். சிறிது கட்டணம் செலுத்தினால், விளம்பரம் இல்லாத ரேடியோ நிலையங்களைப் பெற்று இயக்கலாம். இது தரும் பலவகையான இசைக்காகவே, விண்டோஸ் 10 இயக்க முறைமை பயனாளர்கள் மத்தியில் மிகப் பிரபலமானதாக விளங்குகிறது. ஆப்பிள் கம்ப்யூட்டர்களில் இயக்குவதற்கான பதிப்பும் கிடைக்கிறது. இதனை இலவசமாகப் பெற https://www.microsoft.com/en-us/store/p/pandora/9wzdncrfj46v

என்ற மைக்ரோசாப்ட் ஸ்டோர் தளத்திற்குச் செல்லவும். இந்த செயலி, Android, BlackBerry, iPad, iPhone, iPod touch, Kindle Fire, NOOK, ஆகிய இயக்க முறைகளில் இயங்கும் வகையில் கிடைக்கிறது.

ஐ ஹார்ட் ரேடியோ (iHeart Radio): எண்ணற்ற ரேடியோ நிலையங்களை ஐ ஹார்ட் ரேடியோ செயலி, விண்டோஸ் 10 இயக்க முறைமையில் அளிக்கிறது. அத்துடன் இசைக்கென தனியே இயங்கும் செயலியாகவும் உள்ளது. பலவகையான இசைப் பாடல்களை இதில் காணலாம். இசை, பாடல் மட்டுமின்றி, உலக நடப்புகளை செய்திகளாகத் தரும் ரேடியோ நிலைய ஒலிபரப்புகளையும் இதன் மூலம் பெறலாம். விண்டோஸ் 10 பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் மற்றும் எக்ஸ் பாக்ஸ் ஒன் என அனைத்து சாதனங்களிலும் இதனை இயக்கலாம். அடிப்படை இயக்கத்தினைத் தரும் செயலி இலவசமாகவும், கூடுதல் வசதிகள் தரும் செயலி கட்டணத்தின் பேரிலும் கிடைக்கிறது. இதனைப் பெற, https://www.microsoft.com/en-us/store/p/iheartradio/9wzdncrfj223
 

என்ற மைக்ரோசாப்ட் ஸ்டோர் இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும்.
மேலே தரப்பட்டுள்ள செயலிகளுடன், இன்னும் பல செயலிகள், மைக்ரோசாப்ட் ஸ்டோரிலேயே கிடைக்கின்றன. அவற்றையும் தரவிறக்கம் செய்து இயக்கிப் பார்த்து, உங்களுக்குப் பிடித்த இசை செயலியைப் பயன்படுத்தலாம்.

Sunday, 29 January 2017

Hard Disk பிழைகளை நீக்க இலவச மென்பொருள்

அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் Hard Disk 'ல் பலவிதமான கோளாறுகள் எற்பட்டு அதனால் பிழை செய்தி காணப்படலாம்.  விண்டோஸ் இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள கணினியில்தான் இதுபோன்ற பிழைச் செய்திகள் அதிகமாக காணப்படும்.

LIKE FACE BOOK PAGE CLICK



 சரி பிழை செய்திகள் எதனால் ஏற்படக்கூடும்?
Hard Disk 'ல் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம்.  தேவை இல்லையெனில் மென்பொருள்களை கணினியில் இருந்து நீக்கி விடுவோம்.  நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நீங்காமல் சில File 'கள்  கணினியிலேயே தங்கிவிடும்.  அந்த File 'களால் கணினியில் அடிக்கடி பிழைச்செய்தி தோன்றலாம்.  இதுபோன்ற பிழைச் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவுகிறது.
  தரவிறக்க இங்கே சொடுக்கவும்.

பிறகு மென்பொருளை கணினியில் நிறுவிக் கொள்ளவும்.  பின் இந்த அப்ளிகேஷனை திறந்து சோதனை செய்ய வேண்டிய டிரைவை தேர்வு செய்து, Read Only பொத்தானை அழுத்தி சோதனை செய்து கொண்டு பிழை செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும்.

பிழை செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த பிழை செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும்.  பின் கணினியை மறு தொடக்கம் (Restart) செய்துகொள்ள வேண்டும்.

LIKE FACE BOOK PAGE CLICK

Thursday, 19 January 2017

அட்டகாச 'அட்டைக் கணினி!'

கடன் அட்டைகள் நான்கை அடுக்கியது போன்ற தடிமன்; ஸ்மார்ட்போன் மின்கலனைப் போன்ற தோற்றம்; 


                                       
ஆனால் உள்ளே அபார திறன் கொண்ட, 'இன்டெல்'லின், 'கம்ப்யூட் கார்டு' சி.இ.எஸ்.,ல் பலரைக் கவர்ந்தது. நினைவகம், தகவல் அலசும் புராசசர், வை - பை ரேடியோ போன்றவற்றை அடக்கியது. விசைப் பலகையையும், திரையையும் இணைத்தால், இது ஒரு முழு கணினி தான். இதை, சிலிக்கன் சில்லை தயாரிக்கும் நிறுவனம் படைத்திருப்பது, பலரை வாய் பிளக்க வைத்திருக்கிறது. திற மூல கணினி உலகில் பிரபலமான, 'ராஸ்ப்பெர்ரி பை' கணினி புராசசர்களுக்கு போட்டியாக வந்துள்ள, 'இன்டெல்'லின் இந்த படைப்பை, வீடு மற்றும் அலுவலக சாதனங்களுடன் இணைத்து அவற்றை, 'புத்திசாலி' இயந்திரங்களாக மேம்படுத்த முடியும். ஏற்கனவே நுகர்வோர் மின்னணு சாதன தயாரிப்பாளரான, 'ஷார்ப்' இந்த அட்டைக் கணினியை பயன்படுத்த இருக்கிறது. மேலும் பல கணினி மற்றும் மின்னணு சாதன தயாரிப்பாளர்கள், 'இன்டெல்'லின் இந்த குட்டி ஜீனியசை தங்கள் சாதனத்துடன் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கலாம். மேசைக் கணினி, மடிக் கணினி, பலகைக் கணினி ஆகியவற்றுக்கு அடுத்து, அட்டைக் கணினி ரகத்திற்கு இன்டெல் அச்சாரம் போட்டிருக்கிறது!

Thursday, 12 January 2017

IMPORTANT Run Comands.

Sl.No
Command
பயன்
1
taskmgr
Task Manager ஓபன்செய்ய
2
cmd
இது command Prompt ஓபன்செய்யஉதவுகிறது
3
iexplore
இன்டெர்நெட்எக்ஸ்புளோரர்ஓபன்செய்ய
4
iexplore + “web address”
குறிப்பிட்டதளமுகவரிகொடுத்தால்நேரடியாகஅந்ததளத்தைஇன்டெர்நெட்எக்ஸ்புளோரர்வாயிலாகஓபன்செய்யலாம்.
5
compmgmt.msc
Computer Management ஓபன்செய்ய
6
services.msc
Services பகுதிக்குசெல்லலாம்.
7
eventvwr
Event Viewer பகுதிக்குஇதன்மூலம்செல்லலாம்
8
devmgmt.msc
உங்கள்கணினியில்இணைக்கப்பட்டுள்ள Device களை Manage செய்யஉதவுகிறது.
9
msinfo32
உங்கள்கணினிகுறித்தஅனைத்துதகவல்களும்அறிந்துக்கொள்ளஒரேஇடம்இது
10
cleanmgr
Disk Cleanup செய்யஇதுஉதவும்
11
mmc
Microsoft Management Console க்குசெல்ல
12
excel
MS Excel ஓபன்செய்ய (இன்ஸ்டால்செய்துஇருந்தால்)
13
powerpnt
MS Power Point ஓபன்செய்ய (இன்ஸ்டால்செய்துஇருந்தால்)
14
winword
MS Wordஓபன்செய்ய (இன்ஸ்டால்செய்துஇருந்தால்)
15
notepad
Notepad ஓபன்செய்ய
16
wordpad
Wordpad ஓபன்செய்ய
17
calc
Calculator ஓபன்செய்ய
18
mspaint
MS-Paint ஓபன்செய்ய
19
wmplayer
விண்டோஸ்மீடியாப்ளேயர்ஓபன்செய்ய
20
rstrui
System Restore பகுதிக்குஅழைத்துசெல்லும்
21
control
Control Panel ஓபன்செய்திட
22
control printers
உங்கள்கணினியில்இணைக்கப்பட்டுள்ள Device களைபார்க்கபிரச்சினைகளைசரிசெய்ய
23
msconfig
24
dxdiag
25
osk