SPONSER

Showing posts with label SCIENCE. Show all posts
Showing posts with label SCIENCE. Show all posts

Thursday, 19 January 2017

.'ஒயர்லெஸ் சார்ஜர்'

வந்துவிட்டது!மின் கம்பியில்லாமல் கருவி களுக்கு மின்னேற்றம் செய்ய முடியுமா? 'ஒயர்லெஸ் சார்ஜிங்' எனப்படும் இத் தொழில்நுட்பம், இதுவரை நிகழ மறுக்கும் அற்புதமாகவே இருந்தது. ஆனால், அண்மையில், 'எனர்கஸ் வாட்அப்' என்ற நிறுவனம்,

                                         

 கம்பி இல்லாமலேயே மொபைல் போன்ற சாதனங்களுக்கு மின்னேற்றம் செய்யும் தொழில்நுட்பத்தை வெற்றி கரமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது.மின்காந்த அலைகளை அனுப்பும் வாட்அப் சாதனத்திற்கு, சில அடிகள் தள்ளி மொபைலை வைத்தால், அது சார்ஜ் ஆகிவிடுகிறது. தற்போதைக்கு வாட்அப் சாதனத்திற்கு மிக அருகே வைத்தால் தான் சார்ஜ் ஆகிறது. ஆனால், 2017 இறுதிக்குள், 2-4 அடி, 1,0-15 அடி ஆகிய தொலைவுகளில் தேவையான சாதனங்களை வைத்தால் சார்ஜ் செய்யும், 'மின் பரப்பி' கருவிகளை அறிமுகப் படுத்தஇருப்பதாக எனர்கஸ் வாட்அப் அறிவித்துள்ளது. 

குரல் கட்டளை நுட்பத்தில் முந்தும் 'அலெக்சா!'

வீடு, அலுவலகங்களில் உள்ள சாதனங்களை குரல் உத்தரவின் மூலம் இயக்குவதும், அவை தரும் தகவல்களை குரல் மூலமே கேட்பதும், இனி எதிர்காலத்தில் பரவலாகிவிடும் என்கின்றனர் கணிப் பொறி விஞ்ஞானிகள்.இதனால், செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட, குரல் சார்ந்த சாதனங்களுக்கு இனி கிராக்கி அதிகரிக்கும். இந்த சந்தையில், 2015ல் அமேசான் அறிமுகப்படுத்திய எக்கோ என்ற தட்டையான, 'ஒலிபெருக்கி' போன்ற கருவி, அமேசானின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான, 'அலெக்சா'வைக் கொண்டு இயங்குகிறது. இதை, 'ஸ்மார்ட் ஸ்பீக்கர்' என்றே அமேசான் அழைக்கிறது.

                                     

எக்கோ கருவியிடம் அதன் உரிமையாளர் கட்டளையிட்டால், அவர் விரும்பும் பாடல்களை இசைக்கும். கேட்கும் தகவல்களை இணையத்தில் தேடி, பதிலைத் தரும். வீட்டு மின் அமைப்புகளை கட்டுப்படுத்தும். வீட்டிலுள்ள பிற சாதனங்களுடன் பேசும். எக்கோவை அடுத்து, 'டாட்' என்ற சிறிய ஸ்மார்ட் ஸ்பீக்கரையும் அமேசான் அறிமுகப்படுத்தியது. இந்திய அமேசானில், 8,000 ரூபாய்க்கு கிடைக்கும்; டாட்டும் அலெக்சா மென்பொருளையே பயன்படுத்துகிறது. கடந்த சில வாரங்களாக, அமேசானின் அலெக்சா மென்பொருளை பயன்படுத்தும் பிற நிறுவனங்களின் கருவிகளும் சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளன. லெனோவாவும் அலெக்சாவை பயன்படுத்தும் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. 

அலெக்சா மூலம் இயங்கும் விளக்கை ஜெனரல் எலக்ட்ரிக்கும், துணி துவைக்கும் இயந்திரம், உலர்த்தும் இயந்திரம் ஆகியவற்றை விர்ல்பூல் நிறுவனமும் வெளியிட்டுள்ளன.ஏற்கனவே கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள், குரல் கட்டளை தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. என்றாலும், அமேசானின் தொழில்நுட்பத்தையே இப்போது வீட்டு பயன்பாட்டு சாதன நிறுவனங்கள் சுவீகரித்துள்ளதால், அலெக்சா முன்ணணி இடத்தை பிடித்துள்ளது.

Wednesday, 4 January 2017

ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!

சமீபத்தில் ஒரு நம்பமுடியாத வேகமாக ராக்கெட்டின் உதவியுடன் அதாவது உலகிலேயே மிகவும் வேகமான ராக்கெட் ஒன்றின் மூலம் ஒரு இரகசிய செயற்கைக்கோள் விண்வெளியில் தொடங்கப்பட்டது. அது விண்வெளிக்குள் சென்று என்னென்ன உளவுகள் செய்யப்போகிறது என்பது நமக்கு தெரியாது, அதனை நம்மால் கண்காணிக்கவும் இயலாது, ஆனால், அது ஏவப்பட்ட போது பதிவான புகைப்படங்களை நம்மால் காண முடியும்.

ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!


அட்லஸ்-5 தான் அந்த உலகின் மிகப்பெரிய, மிக வேகமான யூ.எல்.ஏ.யின் மற்றொரு பெரிய ராக்கெட் ஆகும், இருப்பினும் டெல்டா 4 போன்று மிகவும் பெரியது அல்ல. கடந்த 2006-ஆம் ஆண்டில், இதே மாதிரியான ஒரு ராக்கெட் வேகத்தில் ஒரு புதிய எல்லையை தொட்டது அதாவது மணிக்கு 47,000 மைல்கள் வெளியீட்டு வேகம் சென்று முந்தைய உலக சாதனையை முறியடித்தது
ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!


இந்த ராக்கெட் மூலம் விண்வளிக்குள் செலுத்தப்பட்டது என்னவென்பது ரகசியமாகவே உள்ளது ஆனால் அது அமெரிக்க தேசிய புலனாய்வு அலுவலக உளவு சார்ந்த விண்கலம் என்பது மட்டும் உறுதி.

ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!


ஆயினும், ராக்கெட்டில் காணப்பட்ட - ஒரு சிறிய டிராகன் ராக்கெட்டில் ஏறி பயணிக்கும் - லோகோ என்னென்ன உள்ளர்த்தம் கொண்டுள்ளது என்பது காலப்போக்கில் தான் தெரிய வரும். அது என்ன அர்த்தம் கொண்டவைகளாக இருந்தால் என்ன கீழ்வரும் படங்களின் தொகுப்பு அதன் பிரம்மாண்டத்தை முழுமையாய் வெளிப்படுத்த தவறவில்லை..!

ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!

ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!

ஒரே நேரத்தில் 103 செயற்கைக்கோள்: சாதனை படைக்கிறது இஸ்ரோ

ஒரே நேரத்தில் 103 செயற்கைக்கோள்: சாதனை படைக்கிறது இஸ்ரோ



சென்னை: பிப்ரவரி முதல்வாரத்தில், 103 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைக்க இஸ்ரோ தயாராகி வருகிறது. இதில், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளன. 

கடந்த வாரம், ஒரே நேரத்தில் 83 செயற்கைக்கோள்கள் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்திருந்தது. தற்போது 20 செயற்கை கோள்கள் கூடுதலாக சேர்ந்துள்ளதால், விண்ணில் செலுத்தப்படுவது ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்களில், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவின் செயற்கைகோள்கள் அடங்கும். 

Thursday, 15 December 2016

வின்துகள்கள்: நிலாவுக்கு ஊர்தி அனுப்பும் 'டீம் இண்டஸ்!'

வின்துகள்கள்: நிலாவுக்கு ஊர்தி அனுப்பும் 'டீம் இண்டஸ்!'


                        



விண்வெளி ஆராய்ச்சி துறையில், சிறிய, தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க, 'கூகுள் லூனார் எக்ஸ் பிரைஸ்' என்ற, 206 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசை அறிவித்தது கூகுள். டிசம்பர், 2017க்குள், பூமியில் இருந்து நிலாவுக்கு ஒரு ஊர்தியை அனுப்பி, அங்கு, 500 மீட்டர் தூரத்திற்கு அந்த ஊர்தியை செலுத்தி, அதற்கான வீடியோ ஆதாரத்தை காட்ட வேண்டும் என்பது தான் போட்டியின் நோக்கம். இதில் உலகெங்கிலுமிருந்து பல நிறுவனங்கள் போட்டி
இடுகின்றன. இறுதிச் சுற்றுக்குத் தேர்வானவற்றில், இந்தியாவைச் சேர்ந்த, 'டீம் இண்டஸ்' நிறுவனமும் ஒன்று. பெங்களூரில், 2012ல் ராகுல் நாராயண் துவங்கிய டீம் இண்டசில் தற்போது, 80க்கும் மேற்பட்ட இளம் பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். போட்டி விதிகளின்படி, அரசு உதவி பெறாமல் நிதி திரட்டி, நிலா ஊர்தியின் மாதிரியை டீம் இண்டஸ் வடிவமைத்து நடுவர்களிடம் காட்டியது. அதை தேர்வு செய்து, 6.87 கோடி ரூபாய் முதல்கட்ட ஊக்கப்பரிசை கூகுள் தந்தது. இரண்டு கேமராக்கள், ஒரு சூரிய ஒளி மின் பலகை, நான்கு சக்கரங்கள் கொண்ட அந்த ஊர்தியின் வடிவமைப்பையும், செயல் திறனையும், அதை நிலவில் தரைஇறக்கும் சிறிய விண்கலனையும் டீம் இண்டஸ் மேம்படுத்தி சோதித்து வருகிறது. ஊர்தியை பூமியிலிருந்து
விண்வெளிக்கு செலுத்த, இஸ்ரோவின் வர்த்தக பிரிவான, 'ஆன்ட்ரிக்ஸ்' அமைப்புடன் டீம் இண்டஸ் அண்மையில் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஒன்று, 2017ன் இறுதிக்குள், டீம் இண்டசின் நிலா ஊர்தியை விண்ணுக்கு சுமந்து செல்லும். டீம் இண்டசின் நோக்கம் வெற்றியடைய, லாப நோக்கற்ற முதலீட்டாளர்கள் சிலர் முன்வந்து உள்ளனர். 'இன்போசிஸ்' புகழ் நந்தன் நிலேகனி உட்பட சில தனியார், 'இடர் நிதி' முதலீட்டாளர்கள் டீம் இண்டசுக்கு நிதி கொடுத்து உதவி வருகின்றனர்.

Wednesday, 14 December 2016

TECHNOLOGY



இந்தியாவின் ட்ரோன்


                எளிய ட்ரோனை தயாரித்தது. சில மாதங்களுக்கு முன், அதைவிட இலகுவான, திறன் மிக்க, 'ரஸ்தம்- 2' ட்ரோன் மாதிரியை, கர்நாடகாவிலுள்ள சித்ரதுர்கா பகுதியில், வெற்றிகரமாக வெள்ளோட்டம் நடத்தியது.இதையடுத்து, இன்னும் ஒரு ஆண்டிற்குள் மேலும் 10, ரஸ்தம் -2 ட்ரோன்களை தயாரித்து முப்படைகளுக்கு அளிக்கப்படும் என்று, டி.ஆர்.டி.ஓ.,வின் இயக்குனரான எஸ்.கிறிஸ்டோபர், பத்திரிகையாளர்களிடம் அண்மையில் தெரிவித்தார். இந்த புதிய ட்ரோன்களுக்கு, 'தபஸ் 201' என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'ரஸ்தம்' வகை ட்ரோன், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிலையத்தின் (ஐ.ஐ.எஸ்.சி.,) காலம் சென்ற பேராசிரியர் ரஸ்தம் தமானியாவின் தலைமையின் கீழ் படைக்கப்பட்டது.ரஸ்தம்- 2 ட்ரோன்கள், நவீன மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள், மேகங்களை ஊடுருவி பார்க்கும் தொழில்நுட்பம் போன்ற பல புதுமைகள் கொண்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. நடுத்தர உயரத்தில், 250 கி.மீ., வரை ஆளில்லாமல் பறந்து சென்று, வேவு பார்த்தல், கண்காணித்தல் பணிகளைச் செய்யவும், ஆயுதங்கள் தாங்கிச் சென்று தாக்கிவிட்டு திரும்புதல் போன்ற யுத்தப் பணிகளைச் செய்யவும் ரஸ்தம் -2வை முப்படைகள் பயன்படுத்தும்.இந்திய விமானப் படையிலும், கப்பல் படையிலும் தற்போது இஸ்ரேல் தயாரித்த, 'ஹெரான்' வகை ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. தவிர, அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட, 'பிரிடேட்டர்' ட்ரோன்களை வாங்கவும் இந்தியா யோசித்து வருகிறது. ரஸ்தம் -2வின் உற்பத்தி வேகமாக நடந்தால், இந்த இரண்டுக்கும் 
முப்படைகளில் வேலை இருக்காது.

Tuesday, 13 December 2016

TECHNOLOGY




technicNASA's Curiosity Mars rover develops al glitch in drill motor














                   NASA's Curiosity Mars rover has developed an issue with a motor that moves its drilling equipment, and mission scientists have stopped driving or using its arm while they try to diagnose the problem.
Curiosity is at a site on lower Mount Sharp selected for the mission's seventh sample-collection drilling of 2016.
The team learned that Curiosity did not complete the commands for drilling. The rover detected a fault in an early step in which the "drill feed" mechanism did not extend the drill to touch the rock target with the bit.
"We are in the process of defining a set of diagnostic tests to carefully assess the drill feed mechanism. We are using our test rover here on Earth to try out these tests before we run them on Mars," Steven Lee, Curiosity Deputy Project Manager at NASA's Jet Propulsion Laboratory (JPL) in the US.
"To be cautious, until we run the tests on Curiosity, we want to restrict any dynamic changes that could affect the diagnosis. That means not moving the arm and not driving, which could shake it," said Lee.
Two among the set of possible causes being assessed are that a brake on the drill feed mechanism did not disengage fully or that an electronic encoder for the mechanism's motor did not function as expected.
Lee said that workarounds may exist for both of those scenarios, but the first step is to identify why the motor did not operate properly last week.
The drill feed mechanism pushes the front of the drill outward from the turret of tools at the end of Curiosity's robotic arm.
The drill collects powdered rock that is analysed by laboratory instruments inside the rover.
While arm movements and driving are on hold, the rover is using cameras and a spectrometer on its mast, and a suite of environmental monitoring capabilities.
At the rover's current location, it has driven 15.01 kilometres since landing inside Mars' Gale Crater in August 2012. That includes more than 840 meters since departing a cluster of scenic mesas and buttes - called "Murray Buttes" - in September 2016.
Curiosity has climbed 165 metres in elevation since landing, including 44 meters since departing Murray Buttes.
The rover is climbing to sequentially higher and younger layers of lower Mount Sharp to investigate how the region's ancient climate changed, billions of years ago.
Clues about environmental conditions are recorded in the rock layers. During its first year on Mars, the mission succeeded at its main goal by finding that the region once offered environmental conditions favorable for microbial life, if Mars has ever hosted life.
"We still have percussion available, but we would like to be cautious and use it for targets where we really need it, and otherwise use rotary-only where that can give us a sample," said Curiosity Project Scientist Ashwin Vasavada at JPL.