SPONSER

Thursday, 15 December 2016

வின்துகள்கள்: நிலாவுக்கு ஊர்தி அனுப்பும் 'டீம் இண்டஸ்!'

வின்துகள்கள்: நிலாவுக்கு ஊர்தி அனுப்பும் 'டீம் இண்டஸ்!'


                        



விண்வெளி ஆராய்ச்சி துறையில், சிறிய, தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க, 'கூகுள் லூனார் எக்ஸ் பிரைஸ்' என்ற, 206 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசை அறிவித்தது கூகுள். டிசம்பர், 2017க்குள், பூமியில் இருந்து நிலாவுக்கு ஒரு ஊர்தியை அனுப்பி, அங்கு, 500 மீட்டர் தூரத்திற்கு அந்த ஊர்தியை செலுத்தி, அதற்கான வீடியோ ஆதாரத்தை காட்ட வேண்டும் என்பது தான் போட்டியின் நோக்கம். இதில் உலகெங்கிலுமிருந்து பல நிறுவனங்கள் போட்டி
இடுகின்றன. இறுதிச் சுற்றுக்குத் தேர்வானவற்றில், இந்தியாவைச் சேர்ந்த, 'டீம் இண்டஸ்' நிறுவனமும் ஒன்று. பெங்களூரில், 2012ல் ராகுல் நாராயண் துவங்கிய டீம் இண்டசில் தற்போது, 80க்கும் மேற்பட்ட இளம் பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். போட்டி விதிகளின்படி, அரசு உதவி பெறாமல் நிதி திரட்டி, நிலா ஊர்தியின் மாதிரியை டீம் இண்டஸ் வடிவமைத்து நடுவர்களிடம் காட்டியது. அதை தேர்வு செய்து, 6.87 கோடி ரூபாய் முதல்கட்ட ஊக்கப்பரிசை கூகுள் தந்தது. இரண்டு கேமராக்கள், ஒரு சூரிய ஒளி மின் பலகை, நான்கு சக்கரங்கள் கொண்ட அந்த ஊர்தியின் வடிவமைப்பையும், செயல் திறனையும், அதை நிலவில் தரைஇறக்கும் சிறிய விண்கலனையும் டீம் இண்டஸ் மேம்படுத்தி சோதித்து வருகிறது. ஊர்தியை பூமியிலிருந்து
விண்வெளிக்கு செலுத்த, இஸ்ரோவின் வர்த்தக பிரிவான, 'ஆன்ட்ரிக்ஸ்' அமைப்புடன் டீம் இண்டஸ் அண்மையில் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஒன்று, 2017ன் இறுதிக்குள், டீம் இண்டசின் நிலா ஊர்தியை விண்ணுக்கு சுமந்து செல்லும். டீம் இண்டசின் நோக்கம் வெற்றியடைய, லாப நோக்கற்ற முதலீட்டாளர்கள் சிலர் முன்வந்து உள்ளனர். 'இன்போசிஸ்' புகழ் நந்தன் நிலேகனி உட்பட சில தனியார், 'இடர் நிதி' முதலீட்டாளர்கள் டீம் இண்டசுக்கு நிதி கொடுத்து உதவி வருகின்றனர்.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...