கல்வி துறைக்கு ஐ.இ.எஸ்., சேவையை உருவாக்கும் யோசனை நிராகரிப்பு!
கல்வி துறைக்கு ஐ.இ.எஸ்., சேவையை உருவாக்கும் யோசனை நிராகரிப்
ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட, சிவில் சேவைகளை போன்று, கல்வி நிர்வாகத்துக்கென, அகில இந்திய கல்வி சேவையை உருவாக்கும் யோசனையை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நிராகரித்து உள்ளது.
மத்திய அரசின், புதிய கல்விக் கொள்கைஉருவாக்க, டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன்தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு, ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட சிவில் சேவையைபோன்று, கல்வித் துறைக்கென, ஐ.இ.எஸ்.,எனப்படும், இந்திய கல்வி சேவையைஉருவாக்கலாம் என, பரிந்துரைத்தது. இதற்கானஅதிகாரிகளை, மத்திய பணியாளர் தேர்வாணையம்மூலம் நியமிக்கலாம் என்றும், அந்த பரிந்துரையில்கூறப்பட்டது.
ஐ.இ.எஸ்., அதிகாரிகள், கல்வித் துறையின் உயர்மட்ட பதவிகளை வகிப்பர் என்றும், கல்வி நிறுவனங்கள்,அவர்களின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை,மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நிராகரித்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், நமது நாளிதழுக்கு அளித்தபேட்டி:
கல்வி என்பது, ஆசிரியர் - மாணவர் சம்பந்தப்பட்ட துறை. கல்வியியலாளர்களின் அதிகார வரம்பில், கல்வித்துறை இருக்க வேண்டும். கல்வித் துறைக்கென, ஐ.இ.எஸ்., எனப்படும், இந்திய கல்வி சேவையைஉருவாக்கும் அவசியம் இருப்பதாக கருதவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...