SPONSER

Showing posts with label JOB. Show all posts
Showing posts with label JOB. Show all posts

Monday, 30 January 2017

குரூப் 1 தேர்வு அறிவிக்கை: இன்று வெளியீடு

குரூப் 1 தேர்வு அறிவிக்கை புதன்கிழமை (நவ.9) வெளியிடப்படுகிறது.
துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள் குரூப் 1 தொகுதியின் கீழ் வருகின்றன. இந்தப் பதவியிடங்களில் தேர்ச்சி பெறும் அதிகாரிகளுக்கு அடுத்த சில ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர் பதவி அந்தஸ்துகள் கிடைக்கும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குரூப் 1 பதவியிடங்கள் 85 காலியாக உள்ளன.

இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தமிழகம் முழுவதும் நடந்த குரூப் 4 தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் அருள்மொழி நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை வரும் 9- ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி புதன்கிழமையன்று
(நவ.9) தேர்வு அறிவிக்கை வெளியாகிறது. இந்த அறிவிக்கை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்படவுள்ளது.
முதலில் முதல் நிலைத் தேர்வும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு முதன்மைத் தேர்வும் நடத்தப்படும். முதன்மைத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு காலிப் பணியிடங்களில் அவர்கள் நிரப்பப்படுவர்.
                              
இந்தத் தேர்வினை எழுத அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பள்ளிப் படிப்பை உரிய முறையிலும் (எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு என்ற வழிமுறையில்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் உணவக உதவியாளர், பாதுகாவலர் பணி

தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உணவக உதவியாளர், பாதுகாவலர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 15
பணி இடம்: காஞ்சிபுரம் (தமிழ்நாடு)
பணி: Canteen Attendant – 13
வயதுவரம்பு: 21.12.2016 தேதியின்படி 18 – 25க்குள் இருக்க வேண்டும்.
பணி: Security Guard – 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21.12.2016 தேதியின்படி 18 – 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,400 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி 2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.igcar.gov.in/recruitment/Advt_IGC082016.pdf


என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

வங்கிகளில் 4122 சிறப்பு அதிகாரி பணி: ஐபீபிஎஸ் அறிவிப்பு

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐ.பி.பி.எஸ். என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.


இந்த நிலையில், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் ஐபீபிஎஸ் நிறுவனம் 2016 -ஆம் ஆண்டிற்கான 4122 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 4,122
பணி – காலியிடங்கள் விவரம்:  
பணி: I.T. Officer (Scale-I) – 335
பணி: Agricultural Field Officer (Scale I) – 2580
பணி: Rajbhasha Adhikari (Scale I) – 65
பணி: Law Officer (Scale I) – 115
பணி: HR/Personnel Officer (Scale I) – 81
பணி: Marketing Officer (Scale I) – 946
வயதுவரம்பு: இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 01.11.2016 தேதியின்படி 20 வயதுக்கு குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.


கல்வித் தகுதி: குறைந்தபட்ச கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை 16.11.2016 முதல் 02.12.2016 தேதிக்குள் ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.12.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ibps.in/wp-content/uploads/Detail_Advt_CWE_SPL_VI_2016.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து படித்து அறிந்து கொள்ளலாம்.

ரயில்வேயில் 23,801 உதவி லோகோ பைலட் பணி

இந்திய ரயில்வேயில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 23 ஆயிரத்து 801 உதவி லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் கிரேடு 3 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
விளம்பரம் எண்: 01/2016


அமைப்பின் பெயர்: ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் (ஆர்ஆர்பி)
பணி: உதவி லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் கிரேடு 3 (Assistant Loco Pilot (ALP) & Technician Grade 3)
மொத்த காலியிடங்கள்: 23,801
வயதுவரம்பு: 18 – 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் இதர தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


தேர்வு வாரியம் வாரியான காலியிடங்கள் விவரம் மற்றும் இணையதள ஐடி:
கொல்கத்தா – 2038 (www.rrbkolkata.gov.in)
பெங்களூர் – 1172 (www.rrbbnc.gov.in)
அஜ்மீர் – 771 www.rrbajmer.org)
அகமதாபாத் – 546 www.rrbahmedabad.gov.in)
அலகாபாத் – 1527 www.rrbald.gov.in)
புவனேஸ்வர் – 1538 www.rrbbbs.gov.in)
போபால் – 326  www.rrbbpl.nic.in)
பிலாஸ்பூர் – 1680 www.rrbbbs.gov.in)
சென்னை – 1666 www.rrbchennai.gov.in)
கோரக்பூர் – 78 www.rrbgkp.gov.in)
சண்டிகர் – 1161 www.rrbcdg.gov.in)
கவுகாத்தி – 538 www.rrbguwahati.gov.in)
ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் – 475 www.rrbjammu.nic.in)
மால்டா – 373 www.rrbmalda.gov.in)
செகந்திராபாத் – 2839 www.rrbsecunderabad.nic.in)
மும்பை – 4155 www.rrbmumbai.gov.in)
முசாபார்பூர் – 1153 www.rrbmuzaffarpur.gov.in)
சிலிகுரி – 345 www.rrbsiliguri.org)
ராஞ்சி – 2621 www.rrbranchi.org)
திருவனந்தபுரம் – 294 www.rrbthiruvananthapuram.gov.in)
பாட்னா RRB 1271 (www.rrbpatna.gov.in)