குரூப் 1 தேர்வு அறிவிக்கை புதன்கிழமை (நவ.9) வெளியிடப்படுகிறது.
துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள் குரூப் 1 தொகுதியின் கீழ் வருகின்றன. இந்தப் பதவியிடங்களில் தேர்ச்சி பெறும் அதிகாரிகளுக்கு அடுத்த சில ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர் பதவி அந்தஸ்துகள் கிடைக்கும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குரூப் 1 பதவியிடங்கள் 85 காலியாக உள்ளன.
இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தமிழகம் முழுவதும் நடந்த குரூப் 4 தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் அருள்மொழி நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை வரும் 9- ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி புதன்கிழமையன்று
(நவ.9) தேர்வு அறிவிக்கை வெளியாகிறது. இந்த அறிவிக்கை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்படவுள்ளது.
முதலில் முதல் நிலைத் தேர்வும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு முதன்மைத் தேர்வும் நடத்தப்படும். முதன்மைத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு காலிப் பணியிடங்களில் அவர்கள் நிரப்பப்படுவர்.
இந்தத் தேர்வினை எழுத அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பள்ளிப் படிப்பை உரிய முறையிலும் (எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு என்ற வழிமுறையில்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...