இந்தியாவின் ட்ரோன்
எளிய ட்ரோனை தயாரித்தது. சில மாதங்களுக்கு முன், அதைவிட இலகுவான, திறன் மிக்க, 'ரஸ்தம்- 2' ட்ரோன் மாதிரியை, கர்நாடகாவிலுள்ள சித்ரதுர்கா பகுதியில், வெற்றிகரமாக வெள்ளோட்டம் நடத்தியது.இதையடுத்து, இன்னும் ஒரு ஆண்டிற்குள் மேலும் 10, ரஸ்தம் -2 ட்ரோன்களை தயாரித்து முப்படைகளுக்கு அளிக்கப்படும் என்று, டி.ஆர்.டி.ஓ.,வின் இயக்குனரான எஸ்.கிறிஸ்டோபர், பத்திரிகையாளர்களிடம் அண்மையில் தெரிவித்தார். இந்த புதிய ட்ரோன்களுக்கு, 'தபஸ் 201' என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'ரஸ்தம்' வகை ட்ரோன், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிலையத்தின் (ஐ.ஐ.எஸ்.சி.,) காலம் சென்ற பேராசிரியர் ரஸ்தம் தமானியாவின் தலைமையின் கீழ் படைக்கப்பட்டது.ரஸ்தம்- 2 ட்ரோன்கள், நவீன மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள், மேகங்களை ஊடுருவி பார்க்கும் தொழில்நுட்பம் போன்ற பல புதுமைகள் கொண்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. நடுத்தர உயரத்தில், 250 கி.மீ., வரை ஆளில்லாமல் பறந்து சென்று, வேவு பார்த்தல், கண்காணித்தல் பணிகளைச் செய்யவும், ஆயுதங்கள் தாங்கிச் சென்று தாக்கிவிட்டு திரும்புதல் போன்ற யுத்தப் பணிகளைச் செய்யவும் ரஸ்தம் -2வை முப்படைகள் பயன்படுத்தும்.இந்திய விமானப் படையிலும், கப்பல் படையிலும் தற்போது இஸ்ரேல் தயாரித்த, 'ஹெரான்' வகை ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. தவிர, அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட, 'பிரிடேட்டர்' ட்ரோன்களை வாங்கவும் இந்தியா யோசித்து வருகிறது. ரஸ்தம் -2வின் உற்பத்தி வேகமாக நடந்தால், இந்த இரண்டுக்கும்
முப்படைகளில் வேலை இருக்காது.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...