- முக்கியமான சமயத்தில் மொபைல் மின்கலனில் மின்சாரம் தீர்ந்து போவது கடுப்படிக்கும் விஷயம். இதற்கு தீர்வாக, 'பவர் பேங்க்' போன்ற சாதனங்கள் வந்தாலும், அவையும் சமயத்தில் கைகொடுக்காமல் போகக் கூடும். எனவே தான், பலவகை மின் உற்பத்தி சாதனங்கள் புதிது புதிதாக வந்தபடியே இருக்கின்றன. அந்த வகையில், 'ஹேண்ட் எனர்ஜி' என்ற ஒரு புதிய சாதனம் மொபைல் பித்தர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
ஒரு பந்து போல இருக்கும் ஹேண்ட் எனர்ஜி சாதனத்தை, ஒரு கையால் சுழற்றினால், அதன் உள்ளே இருக்கும் பாகங்கள் சுழன்று மொபைலுக்கு தேவையா மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. ஹேண்ட் எனர்ஜியுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்பி வடத்தை மொபைல் சாதனத்துடன் இணைத்தால் போதும். மின்சாரம் இல்லாமல் வாடும் மொபைல் மின்கலன் ஜிவ்வென்று மின்சாரத்தை குடித்து உயிர்பெறும். ஒரு கையால் ஹேண்ட் எனர்ஜியை சுழற்றிய படியே, மறு கையால் மொபைலில் வேண்டியவர்களுடன் வெகுநேரம் பேசலாம். அண்மையில், 'கிக்ஸ்டார்டர்' இணையதளத்தில் நிதி கோரியிருக்கும் ஹேண்ட் எனர்ஜிக்கு, கெடு தேதி முடிவதற்கு, 20 நாட்கள் இருக்கும் போதே, ஆதரவாளர்களிட மிருந்து, 90 சதவீத நிதி கிடைத்துவிட்டது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரவுள்ள ஹேண்ட் எனர்ஜி சாதனத்தை, சிறிய அளவில் மின்சாரம் தேவைப்படும் எந்த கருவிக்கும் பயன்படுத்தலாம்.
Advertisement
Advertisement
முக்கியமான சமயத்தில் மொபைல் மின்கலனில் மின்சாரம் தீர்ந்து போவது கடுப்படிக்கும் விஷயம். இதற்கு தீர்வாக, 'பவர் பேங்க்' போன்ற சாதனங்கள் வந்தாலும், அவையும் சமயத்தில் கைகொடுக்காமல் போகக் கூடும். எனவே தான், பலவகை மின் உற்பத்தி சாதனங்கள் புதிது புதிதாக வந்தபடியே இருக்கின்றன. அந்த வகையில், 'ஹேண்ட் எனர்ஜி' என்ற ஒரு புதிய சாதனம் மொபைல் பித்தர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
ஒரு பந்து போல இருக்கும் ஹேண்ட் எனர்ஜி சாதனத்தை, ஒரு கையால் சுழற்றினால், அதன் உள்ளே இருக்கும் பாகங்கள் சுழன்று மொபைலுக்கு தேவையா மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. ஹேண்ட் எனர்ஜியுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்பி வடத்தை மொபைல் சாதனத்துடன் இணைத்தால் போதும். மின்சாரம் இல்லாமல் வாடும் மொபைல் மின்கலன் ஜிவ்வென்று மின்சாரத்தை குடித்து உயிர்பெறும். ஒரு கையால் ஹேண்ட் எனர்ஜியை சுழற்றிய படியே, மறு கையால் மொபைலில் வேண்டியவர்களுடன் வெகுநேரம் பேசலாம். அண்மையில், 'கிக்ஸ்டார்டர்' இணையதளத்தில் நிதி கோரியிருக்கும் ஹேண்ட் எனர்ஜிக்கு, கெடு தேதி முடிவதற்கு, 20 நாட்கள் இருக்கும் போதே, ஆதரவாளர்களிட மிருந்து, 90 சதவீத நிதி கிடைத்துவிட்டது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரவுள்ள ஹேண்ட் எனர்ஜி சாதனத்தை, சிறிய அளவில் மின்சாரம் தேவைப்படும் எந்த கருவிக்கும் பயன்படுத்தலாம்.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...