வர்தா புயல்: 10 ஆயிரம் பேரை காப்பாற்றிய இஸ்ரோ செயற்கைக்கோள்:
மும்பை: வர்தா புயல் சென்னையை சின்னாபின்னாமாக்குவதற்கு முன்னர், இஸ்ரோ செயற்கைகோள் அளித்த தகவல் மூலம் 10 ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் உருவான வர்தா புயல் கடந்த திங்கட்கிழமை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சின்னாபின்னமாக்கி விட்டு கரையை கடந்தது. இந்த மாவட்டங்களில் பெரும்பாலான மரங்கள் வேறோடு சாய்ந்து விட்டன. மின்சார கம்பங்கள் சேதமடைந்துள்ளன. சில பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை. தொடர்ந்து நிவாரண பணிகள் நடந்து வருகிறது.
மீட்பு:
இந்நிலையில், மழை வெள்ளத்திற்கு முன்னர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மக்கள் மீட்கப்பட்டதற்கு, இஸ்ரோ ஏவிய இன்சாட் 3 டிஆர் ஸ்காட்சேட் -1 செயற்கை கோள்கள் அளித்த தகவலே காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த செயற்கைகோள்கள், புயல் நகர்ந்து சென்ற திசை குறித்து தகவல் அளித்தது. இதன் அடிப்படையில் அதிகாரிகள், புயல் தாக்கக்கூடிய பகுதிகளில் வசித்த மக்களை மீட்டு பத்திரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆந்திர கடற்கரை பகுதியிலும் மக்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நவீன செயற்கைக்கோள்:
நவீன பருவநிலையை கணிக்கும் செயற்கை கோளான இன்சாட் 3 டிஆர், கடந்த செப்டம்பர் 8ம் தேதி ஏவப்பட்டது. ஸ்காட்சாட் -1 செயற்கைக் கோள் கடந்த செப்டம்பர் 26ம் தேதி ஏவப்பட்டது. வர்தா புயல் காரணமாக ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் சேதம் அடையும் என கூறப்பட்டது. ஆனால், இஸ்ரோ அதிகாரிகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சேதம் ஏற்படவில்லை.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...