SPONSER

Tuesday, 13 December 2016

NEWS

ரூ.2.60 கோடிக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகள்: டெல்லி சட்ட நிறுவனத்தில் இருந்து ரூ.13 கோடி பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை:

                                             
டெல்லி சட்ட நிறுவனத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.2.6 கோடி புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் உள்பட ரூ.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
அதிரடி சோதனைகருப்பு பணம் பதுக்குதலை கட்டுப்படுத்தும் நோக்கில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஏராளமான கருப்பு பண முதலைகள் தங்களிடம் இருக்கும் கணக்கிலடங்கா பணத்தை சட்டவிரோதமான வழிகளில் மாற்றி வருகின்றனர்.
இதனால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் புதிய ரூபாய் நோட்டுகள் உள்பட ஏராளமான கருப்பு பணம் கைப்பற்றப்பட்டு வருகிறது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகள்இந்த நிலையில் டெல்லியில் இயங்கி வரும் சட்ட நிறுவனம் ஒன்றில் குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு சோதனை மேற்கொண்டனர். அங்கே ரோகித் டாண்டன் என்ற வக்கீலுக்கு சொந்தமான அலுவலகத்தில் இந்த அதிரடி சோதனை நிகழ்த்தப்பட்டது. அப்போது அங்கே கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
மொத்தம் சுமார் ரூ.13.5 கோடி பணம் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதில் ரூ.7 கோடிக்கு பழைய 1,000 ரூபாய் நோட்டுகளும், ரூ.2.61 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், ரூ.3 கோடிக்கு 100 ரூபாய் நோட்டுகளும் மீதம் 50 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுமாக இருந்தன.
ரூ.125 கோடி வருமானம்இந்த பணத்தை கைப்பற்றிய போலீசார் இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் இது குறித்து விசாரணையை தொடங்குவார்கள் என தெரிகிறது.
வக்கீல் ரோகித் டாண்டனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர் தன்னிடம் கணக்கில் காட்டாத ரூ.125 கோடி வருமானம் இருப்பதாக அறிவித்தார். அதன்பேரில்தான் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
பண குடோன்சோதனை நடத்தப்பட்ட சட்ட நிறுவனம் வக்கீல்களின் பண குடோனாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே அங்கு மேலும் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அப்போது மேலும் பணம் பறிமுதல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சட்ட நிறுவனத்தில் ரூ.13 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது டெல்லியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...