உங்கள் ஐபோனை வேகமாக செயல்பட வைக்கும் யுக்திகள்:
அன்றாடம் பயன்படுத்தும் ஐபோன்கள் நாளடைவில் மிகக் மெதுவாக செயல்படுவது பலருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்சனையே! இது போன்ற பிரச்சனைகளை சில வழிமுறைகளை கையாண்டால் எளிதில் நீக்கி விடலாம். ஐபோன் பயனர்களுக்கான முக்கிய வழிமுறைகள் பின்வருமாறு :
*மொபைலில் அளவுக்கதிகமாக சேமித்து வைத்துள்ள பழைய புகைப்படங்களை மற்றும் தேவையில்லாத டாக்குமெண்ட்டுகளை நீக்குவதும் மிக அவசியமே . நூற்றுக்கணக்கான அளவு புகைப்படங்கள் இருப்பின் அவற்றை கணினியில் ஒரு போல்டரில் போட்டு வைப்பது சிறந்தது.
*அதிகளவு ஏற்றி வைத்துள்ள பயன்பாடுகளை நீக்க வேண்டும் . ஏனெனில் அவை அதிக அளவு இடங்களை ஐபோனில் ஆக்கிரமிப்பு செய்து ஐபோனை மெதுவாக இயங்கவைக்கும் . இவை எந்த அளவுக்கு இடங்களை ஆக்கிரமித்து கொண்டுள்ளன என்பதை அறிய போனில் Settings > General > Storage & iCloud Usage > Manage Storage.- க்கு சென்று பார்த்தால் அறியலாம் . இதனால் மிக முக்கியமான பயன்பாடுகளை மட்டும் சேமித்து வைப்பது நன்று.
*பழைய குறுந்தகவல் செய்திகளை மாதக்கணக்கில் வைத்திருந்தால் அது மொபைலின் வன்பொருளை பாதிக்கும் வாய்ப்புண்டு.இதற்கு தகுந்த தீர்வு என்னவென்றால் உங்கள் போனில் உள்ள குறுந்தகவல்களை குறிப்பிட்ட கால வரையறைக்கு மட்டும் சேமித்து வைத்திருக்கும் அமைப்புகளை அமைத்துவிட்டால் அவை குறிப்பிட்ட காலம் வரைக்கும் இன்பாக்ஸில் காணும்படி செய்யலாம்.இதற்கு Settings > Messages > Keep Messages. என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.
*ஐபோனை உங்களது கணினி போன்று பயன்படுத்த வேண்டும். அதாவது அடிக்கடி இணைய தேடல் வரலாறுகளை நீக்கிக் கொண்டே இருப்பது அவசியமே. இடைமாற்று நினைவகம் என்று கூறப்படுகின்ற அதாவது பலமுறை அணுகப்படும் தரவுகளுக்கு ஒதுக்கப்படும் ஒரு விரைவு நினைவகத்தினை அடிக்கடி அழித்து விடுவது அவசியம் . இதற்கு மொபைலில் Settings > Safari,-க்கு சென்று Clear History and Website Data வை தட்டினால் போதும்.
*உங்கள் ஐபோன் மெதுவாக இயங்க ஒரு முக்கிய காரணம் அதிலிருக்கும் பயன்பாடுகளின் ஆட்டோ அப்டேட்டுகலாகத்தான் இருக்கும். தேவையற்ற பயன்பாடுகளின் அப்டடேட்டுகளை நீக்க இது ஒரு சிறந்த வழியாகும். இதற்கு உங்கள் மொபைலில் Settings > iTunes & App Store-க்கு சென்று OFF MODE யை தேர்ந்தெடுக்க வேண்டும்.
*மேற்கூறியது போன்றே ஆட்டோமேட்டிக் அப்டேட்டுகளை தேவையற்ற இசை ,நூல்கள் போன்றவற்றை பதிவிறக்கங்கள் செய்யாமல் தவிர்கும்படி செய்யலாம்.இதற்கு மொபைலில் Settings > iTunes & App Store-க்கு சென்று apps, books, music -இல் OFF MODE யை தட்டினால் போதும்.
*மேலும் அடிக்கடி உங்கள் மொபைலில் உங்களுக்கு அருகிலிருக்கும் வை-பை இணைப்புகளுடன் இணைக்கவா? என்பது போன்ற கேள்விகளுக்கு ஆம் என்ற பதிலை கொடுத்தால் அது உங்கள் சாதனத்தை மிக மெதுவாக செயல்பட வைக்கும். இதனை நீக்க Settings > Wi-Fi > Ask to Join Networks இல் OFF MODE யை தேர்ந்தெடுக்க வேண்டும் .
*அன்றாடம் முடிந்த வரையில் ஒருமுறையாவது ஐபோனை ரீஸ்டார்ட் செய்வதும் மொபைல் வேகத்தை அதிகரிக்கும் வழிகளில் ஒன்றே ! இதனால் ஐபோன் அடிக்கடி மந்தாமாகாமல் தடுக்கலாம்.
*பேட்டரி டாக்டர் என்ற பயன்பாட்டினைக் கொண்டு உங்கள் ஐபோன்கள் எவ்வளவு மெதுவாக இயங்குகிறது என்பதை அறியலாம். மெதுவாக இயங்குகிறது என்றால் அதிலுள்ள நினைவகத்தை மறு ஒதுக்கீடு செய்து வழங்க உதவுகிறது.
இது போன்ற வழிமுறைகளை கடைபிடித்தால் ஐபோனின் ஆயுள்காலத்தினை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கல் ஐபோன் சாதனம் மெதுவாக செயலபாடாமல் தடுக்கலாம்.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...