கோவை,:''ஜல்லிக்கட்டு நடக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது,'' என, பா.ஜ., தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் கூறினார்.
கோவையில் பா.ஜ., மாநில இளைஞரணி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த இக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர்ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக அரசின் தலைமைச்செயலர் அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனைக்கு மேற்குவங்க மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளதை கடுமையாக எதிர்க்கிறேன்.
தமிழக முதல்வரே இதுகுறித்து பேசாதபோது சிலர் இதற்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர். சசிகலாவை துணைவேந்தர்கள் நேரில் சென்று சந்தித்தது புதிய அணுகுமுறையாக உள்ளது.பா.ஜ., அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்கு என்றும் உறுதுணையாக இருக்கும். நாங்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்கள் அல்ல. உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கு நடந்துவரும் நிலையில் அதை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.இவ்வாறு, முரளிதர்ராவ் கூறினார்.

No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...