காற்றிலிருந்து திரவ எரிபொருள்தயாரிக்க முடியுமா?
காற்றிலிருக்கும் கரியமில வாயுவை, பயனுள்ள எரிபொருளாக மாற்றித் தரும் தொழில்நுட்பத்தை, ஜெர்மனியைச் சேர்ந்த, கார்ல்ஸ்ருஹே தொழில்நுட்ப நிலையம் உருவாக்கியுள்ளது. இதை வர்த்தகப்படுத்த, 'இன்டெராடெக்' என்ற நிறுவனத்தையும் கார்ல்ஸ்ருஹே உருவாக்கியுள்ளது. 'சோல்ட்ஏர்ட என்ற இந்த தொழில்நுட்பம், வாயுவை திரவமாக்கும் தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. ஒரு சிறிய கன்டெய்னருக்குள், பொருத்திவிடக்கூடிய அளவுக்கு உள்ள, இயந்திரம் ஒன்று காற்றில் உள்ள கரியமில வாயுவை பிரித்தெடுத்து, திரவமாக்கி, வேதிவினை மூலம் எரிபொருளாக மாற்றுகிறது. இந்த இயந்திரத்திற்கு சூரிய மின்சாரமே போதும் என்கிறது இன்டெராடெக். பின்லாந்திலுள்ள, வி.டி.டி., தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில், தற்போது ஒரு சோல்ட்ஏர் இயந்திரம் வெள்ளோட்டத்தில் இருக்கிறது. அது வெற்றி பெற்றதும், 2018ல் வர்த்தக ரீதியில் முழு வீச்சில் சோல்ட்ஏர்
விற்பனைக்கு வரும்.
விற்பனைக்கு வரும்.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...