SPONSER

Monday, 9 January 2017

1ஜிபி தினசரி வரம்பை மீறி ஜியோ ஹை-ஸ்பீட் தரவு பயன்படுத்துவது எப்படி?

2016- நமக்கெல்லாம் பொதுவாக நடந்த ஒரு நல்ல விடயம் தான் - ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம். இதுவரை ஜியோ 4ஜி சிம் கார்ட் ஒன்றை கையில் பெறாதவர்கள் தவிர்த்து பிற அனைவருமே ஜியோ 2016-ஆம் ஆண்டில் நடந்த ஒரு நல்ல விடயம் என்பதை ஒற்றுக்கொள்வார்கள்.
அதிலும் மிக முக்கியமாக ஜியோ வெல்கம் ஆபர் முடிவடையும் நேரத்தில் மேலும் 3 மாதங்களுக்கான அதன் இலவச சலுகைகளை நீட்டிக்கும் (மார்ச் 31, 2017 வரை) வண்ணம் ஹேப்பி நியூ இயர் ஆபர் வழங்கியது 2017-ஆம் ஆண்டிற்க்கும் சேர்த்தே ஒரு நல்ல விடயமாக அமைந்தது ஆனால் பயனர்கள் அனைவருக்கும் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆபரில் ஒரு சின்ன வருத்தம் காத்திருந்தது. அதுதான் 1ஜிபி என்ற தினசரி டேட்டா லிமிட் அதாவது ஒருநாளைக்கு இவ்வளவுதான் அதிவேக இண்டர்நெட் என்ற தரவு எல்லை.
பூஸ்டர் பேக்
ஆனாலும் கூட 1ஜிபி என்று வழங்கப்பட்டுள்ள தினசரி ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வரம்பை மீறி ஜியோ ஹை-ஸ்பீட் தரவு பயன்படுத்த ஒரு வழி இருக்கிறது. அதெப்படி என்பதை பற்றிய இது.தொகுப்பே இது.தொகுப்பே 

பூஸ்டர் பேக்

1ஜிபி என்ற தரவு எல்லையை மீறி அதிக வேகத்தில் மீண்டும் உலவ நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் பூஸ்டர் பேக்குகளை பயன்படுத்த முடியும். இதற்கான செலவாக நிறுவனம் 6ஜிபி பேக் ரூ.301/- என்றும் மற்றும் 1ஜிபி பேக் ரூ.51/- என்றும் நிர்ணயித்துள்ளது. இதை ஆக்டிவேட் செய்வதும் மிகவும் எளிமையே.!

வழிமுறை #01


வழிமுறை #01

உங்கள் மொபைலில், மைஜியோ பயன்பாட்டை திறக்கவும். உள்நுழைந்து லாக்-இன் அல்லது ரிஜிஸ்டர் செய்யவும். உங்கள் ஜியோ தொலைபேசி எண் தான் உங்கள் பயனர் பெயராகும். இப்போது, நீங்கள் ஜியோ பயன்பாடுகளின் ஒரு பட்டியலை பார்ப்பீர்கள் இப்போது மைஜியோ என்பதற்கு அருகிலுள்ள ஓபன் என்பதை டாப் செய்யவும்.

வழிமுறை #02

வழிமுறை #02

யூஸேஜ் என்பதை டாப் செய்து - டேட்டா என்பதை டாப் செய்யவும். நீங்கள் 1ஜிபி என்ற டேட்டா எல்லை கடந்து விட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்த இதை செய்ய வேண்டும். ஜியோ வேகம் எப்போதுமே நிலையானதாக இருக்காது ஏனெனில் மெதுவான இணைப்பில் இருக்க முடியும். ஆக டேட்டா எல்லையை சோதிப்பது அவசியமாகிறது.

வழிமுறை #03

வழிமுறை #03

நீங்கள் வரம்பை கடந்து விட்டீர்கள் என்றால், பேக் ஐகானை டாப் செய்து மீண்டும் மெயின் ஸ்க்ரீனுக்கு திரும்பி போகவும். ரீசார்ஜ் ஐகானை டாப் செய்யவும், பின்னர் பூஸ்டர் ஐகானை டாப் செய்யவும். நீங்கள் விரும்பும் திட்டத்தை தேர்வு செய்து வலது பக்கத்தில் விலை ஆப்ஷனை டாப் செய்யவும். அதன் வழியாக நீங்கள் ஜியோமணி ஆப்பிற்கு கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு கிரெடிட், டெடிபிட் அல்லது நெட் பேங்கிங் வழியாக கட்டணம் செலுத்த முடியும்.

வழக்கமான 4ஜி வேகம்

வழக்கமான 4ஜி வேகம்

அவ்வளவு தான் இப்போது நீங்கள் வழக்கமான 4ஜி வேகத்தில் உலவ முடியும். 6ஜிபி பேக் மூலம் நீங்கள் ரூ.4 சேமிக்க முடியும், அதன் தரவு எல்லை தினமும் மறுகட்டமைக்கப்படும் மற்றும் இந்த பேக் 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...