SPONSER

Monday, 9 January 2017

2017 CES -இல் அனைவரையும் கவர்ந்த அற்புதமான தயாரிப்புகள். ஒரு பார்வை

சமீபத்தில் நடைபெற்ற இந்த ஆண்டின் CES டெக்னாலஜி துறையினர்களை பெரிதும் கவரும் வகையில் இருந்தது. ஆசஸ், எல்ஜி, சாம்சங் மற்றும் சியாமி நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் இதில் அறிமுகம் செய்யப்பட்டன.

2017 CES -இல் அனைவரையும் கவர்ந்த அற்புதமான தயாரிப்புகள். ஒரு பார்வை

இந்த CES இல் அனைவரையும் கவர்ந்த கவர்ச்சிகரமான புதிய தயாரிப்புகள் குறித்து தற்போது பார்ப்போம்


சியாமி மி டிவி 4 மற்றும் ஸ்மார்ட்போன்கள் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஜாம்பவானாக இருக்கும் சியாமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சியாமி மி டிவி 4, அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு ஸ்மார்ட்போனை விட மிக மெல்லியதாக அமைந்த இந்த டிவி உண்மையிலேயே ஒரு தரமான தயாரிப்புதான். மேலும் இந்த டிவி தான் உலகிலேயே முதன்முதலில் டால்பி ஆட்டம்ஸ் ஆடியோ டெக்னாலஜியில் வெளிவந்துள்ள டிவி என்பதில் பெருமை பெறுகிறது. மேலும் கிட்டத்தட்ட பெஸல் லெஸ் மாடலை கொண்ட இந்த டிவி,49 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச்களில் கிடைக்கின்றது. டிவியை தவிர சியாமி நிறுவனம் மி மிக்ஸ் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது. செராமிக் பாடியில் 18 கேரட் தங்கமுலாம் பூச்சுடன், பிங்கர் பிரிண்ட், செல்பி கேமிரா மற்றும் பெஸல் லெஸ் டிஸ்ப்ளேவுடன் இந்த ஸ்மார்ட்போன் அமைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த இரண்டு பொருட்களையும் இப்போதைக்கு இந்தியாவில் வெளியிடும் எண்ணம் சியாமி நிறுவனத்திற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்

லெனோவா ஸ்மார்ட் அசிஸ்டெண்ட்:

லெனோவா ஸ்மார்ட் அசிஸ்டெண்ட்: இந்த CES இல் கவர்ந்த மற்றொரு பொருள் லெனாவோ நிறுவனத்தின் ஸ்மார்ட் அசிஸ்டெண்ட். ஒரு பர்சனல் அசிஸ்டெண்ட் போல் உதவும் இந்த சாதனம் நாம் வாய்ஸ் மூலம் கொடுக்கும் கட்டளைகளை ஆன்லைனில் தேடி நமக்கு அளிக்கும். இந்த ஸ்மார்ட் அசிஸ்டெண்ட் ரூ.9000 விலையில் வரும் மே மாதம் முதல் சந்தையில் கிடைக்கும். இந்தியாவிலும் இந்த பொருளை லெனாவோ வெளியிடுமா என்பது குறித்த தகவல் விரைவில் வரவுள்ளது.
சாம்சங் குரோம் புக்:


சாம்சங் குரோம் புக்: சாம்சங் நிறுவனத்தின் மிகவும் பெருமைக்குரிய தயாரிப்பான இந்த சாம்சங் குரோம் புக், இந்திய மார்க்கெட்டில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரோம் புக் ப்ளஸ் மற்றும் குரோம் புக் புரோ ஆகியவற்றை அடுத்த அம்சமான இந்த குரோம் புக், இண்டல் கோர் M3 பிராஸசருடன், குவாட் HD 2400x1600 ஸ்க்ரீன் ரெசலூசண்டன் கிடைக்கின்றது. மேலும் இதில் டியூரபிள் கொரில்லா கிளாஸ் 3ம் உள்ளது. இந்த குரோம் புக் 360 டிகிரியில் பயன்படுத்தும் வகையில் இருப்பதால் பயனாளிகள் எளிதில் கையாளலாம். மேலும் இந்த குரோம் புக்கில் கீபோர்ட், டிராக்பேட் ஆகியவையும் இணைந்துள்ளது.

எல்ஜி சிக்னேட்சர் டிவி W:

எல்ஜி சிக்னேட்சர் டிவி W:
           எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் இந்த OLED டெலிவிஷன், மிக மிக மெல்லியதானது. 2.57 மிமீ அளவே உள்ள இந்த டெலிவிஷன் சுவற்றில் பொருத்தும் வகையில் உள்ளது. இந்த டெலிவிஷன் இந்திய மார்க்கெட்டிலும் கிடைக்கும். இந்தியர்கள் இந்த எல்ஜி மாடல் டெலிவிஷனை பெருமளவில் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசஸ் AR மற்றும் ஜென்போன் ஜூம் 3

ஆசஸ் AR மற்றும் ஜென்போன்

 ஜூம் 3 கூகுள் டாங்கோ மற்றும் டேட்ரீம் அம்சங்களுடன் வெளிவரும் முதல் ஆசஸ் ஸ்மார்ட்போன் ஆசஸ் AR தான் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பக்கம் பிங்கர் பிரிண்ட் சென்சாருடன் வெளிவந்துள்ள இந்த ஆசஸ் AR ஸ்மார்ட்போன், 5.7 இன்ச் டிஸ்ளே, 2560x1440 பிக்சல் ரெசலூசனை கொண்டது. மேலும் லேட்டஸ்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட்டை இந்த போன் கொண்டது என்பது இதன் சிறப்பு அம்சம். மேலும் 8GB ரேமில் வெளிவரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசஸ் நிறுவனம் முதன்முதலில் இரண்டு பின்பக்க கேமிராக்களை கொண்டு தயாரித்த மாடல்தான் ஆசஸ் னெபொன்ன் 3 ஜூம். இரண்டுமே 12MP கொண்டது என்பது இன்னொரு சிறப்பு. 
             ZTE V8 புரோ:ஒரு கேமிராவில் 25மிமீ லென்ஸும் இன்னொரு கேமிராவில் 56 மிமீ லென்ஸூம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கேமிராவில் 4K வீடியோவை மிகச்சிறப்பாக பதிவு செய்யலாம். மேலும் இதில் 5000 mAh பேட்டரியும் உள்ளது. இதுவரை வெளிவந்த ஜென்போன்களில் இதுதான் பெரிய பேட்டரி உள்ளது. ஸ்னாப்டிராகன் 625 SoC பிராஸசர் மற்றும் 4GB ரேம், 5.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு நெளகட் போர்டு ஆகியவை இதன் மற்ற சிறப்பு அம்சங்கள். இந்திய மார்க்கெட்டில் இந்த புதிய வகை போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லெனோவா திங்க்பேட் X1 கார்பன் மற்றும் யோகா நோட்புக் :


2017 CES இல் லெனாவா அறிமுகம் செய்துள்ள மற்றொரு தயாரிப்புதான் இந்த திங்க்பேட் மற்றும் யோகா பொருட்கள். 14 இன்ச்சில் பிசினஸ் நோட்புக்காக வெளிவந்துள்ள இந்த லெனோவா திங்க்பேட் X1 கார்பன், எடை குறைவானது என்பதால் மிகுந்த பயனளிக்கும். இதன் எடை வெறும் 2.5 பவுண்டுகள். இந்த லேப்டாப் குறைந்தது 15 மணி நேரம் செயல்படும் பேட்டரியை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ள இந்த லெனோவா திங்க்பேட் X1 கார்பன் ரூ.90000 விலையில் வரும் பிப்ரவரி முதல் கிடடக்கும். யோகா நோட்புக்கை பொருத்தவரை இதுவொரு நெகிழும் தன்மையுடையது என்பதும் 14 இன்ச் OLED லெனோவா திங்க்பேட் X1 கார்பன் மற்றும் யோகா நோட்புக்டிஸ்ப்ளேவை கொண்டது என்பதும் சிறப்பு அம்சம். இதில் 5 மணி நேரம் தாங்கும் பேட்டரி உள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த யோகா நோட்புக் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...