SPONSER

Thursday 19 January 2017

ஜல்லிக்கட்டு பாரத கலை - கலாச்சார விழா - மிருக வதை அல்ல: மகரிஷி பரஞ்சோதியார் உரை

"ஜல்லிக்கட்டு பாரத கலை , கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கவும் ஒரு வீர விளையாட்டு . இது மிருக வதை அல்ல. இந்த வீர விளையாட்டு இளைஞர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் விழா. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் நன்கு பராமரிக்கப்படுகின்றன . நல்ல திடகாத்திரத்திற்கு உரிய உணவு கொடுக்கப்பட்டு , சுகாதாரமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன .இது ஒரு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு . காளைகள் எந்த நிலையிலும் துன்புறுத்தப் படுவது இல்லை கழுதைகள் மீது சுமை ஏற்றப்படுகிறது . குதிரைகள் பாரம் சுமக்கின்றன . மாடுகளை வெட்டிக் கறி விற்க அனுமதிக்கப் படுகிறது . ஆனால் கனிவுடன் பராமரிக்கப்பட்டு துணிவுடன் விளையாடும் வீர விளையாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் தடை விதைப்பதும் சரியல்ல . நீதி அரசர்கள் பரிவுடன் பரிசீலித்து நல்லதொரு தீர்ப்பை வழங்க வேண்டும் " என திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் மகரிஷி பரஞ்சோதியார் , பரஞ்சோதிநகரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அருளாசி உரை வழங்கிப் பேசுகையில் குறிப்பிட்டார் . விழாவில் அறங்காவலர்கள் திருச்சி எம் . சுப்பிரமணியம் , பொன்னுசாமி , மலேசியா சிவகுரு , சிங்கப்பூர் மூத்த பத்திரிகையாளர் வே . புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். 
பொதுச் செயலர் கே . எஸ் . சுந்தரராமன் வரவேற்புரை ஆற்றினார் .முன்னதாக சிங்கப்பூர், மலேசியா , இந்தியா எனது தனித்த தனி பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு பொங்கல் வைக்கப்பட்டது . தளி பேரூராட்சித் தலைவி தொடக்கி வைத்தார் . முத்துகிருஷ்ணன் பூஜை செய்து தீபாராதனை காட்டினார் . ஆண்களும் பெண்களும் குலவை கூறி , பொங்கலோ பொங்கல் என்று முழங்கினார் .பின்னர் திருமூலர் அரங்கில் பொங்கல் சிறப்புக் கூட்டம் சிங்கப்பூர் வே. புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்றது . மெய்ஞ்ஞானாசிரியர் கிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார் மலேசியா சிவகுரு, சிங்கப்பூர் லட்சுமணதாஸ் , இயற்கை மருத்துவர் சேலம் அப்பன் , கவிஞர் வாழவாடி கிருஷ்ணசாமி முதலானோர் உரையாற்றினார் . பொதுச் செயலர் கே. எஸ் . சுந்தரராமன் நிறைவுரை ஆற்றினார். குரு கீதத்துடன் தொடங்கிய விழா நன்றி உரையுடன் நிறைவு பெற்றது 

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...