வறட்சி மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்படும் : முதல்வர்
சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்படும் என முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 32 மாவட்டங்களும் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்படும். வறட்சி கோரிக்கை நிவாரண மனு விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். விவசாய வரிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். நிலவரி முழமையாக ரத்து செய்யப்படும்.
இழப்பீடு:
நெற்பயிரில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5, 645 வழங்கப்படும். இதர பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ..5,465 வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மானாவரி பயிர்கள் ஏக்கர் ஒன்ற்கு ரூ.3 ஆயிரமும், சோள வகைகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.45 ஆயிரமும் மஞ்சளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
காப்பீடு தொகை:
காப்பீடு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற பயிர் அறுவடை பரிசோதனை நடத்தப்படும்.பயிர்கடனை மத்திய கால கடனாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 100 சதவீத பயிர்கள் மகசூலில் பாதிப்பு இருந்தால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் பெற இயலும். 80 சதவீத மகசூல் பாதிப்பிற்கு ரூ.20 ஆயிரமும், 60 சதவீத மகசூல் பாதிப்பிற்கு ரூ.15 ஆயிரமும், 33 சதவீத மகசூல் பாதிப்பிற்கு ரூ.8.250 ம் பெற இயலும்.
உதவித்தொகை:
விவசாயிகள் 2 மாதத்தில் 17 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும்.விவசாயிகள் தற்கொலை தொடர்பாக அறிக்கை கலெக்டர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பின்னர் அவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை 150 நாளாக உயர்த்தப்படும்.
ஏரிகள் தூர்வார...:
நீர் செறிவூட்டும் பணிகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்படும். குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த ரூ.350 கோடியில் பணிகள் செய்யப்படும். நீராதாரங்களை மேம்படுத்தும் பணிகள் ரூ.160 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். ஏரி குளம் பாசனவாழ்க்கால்களை தூர்வார ரூ.3,400 கோடி ஒதுக்கப்படும். வறட்சியில் இருந்து வன உயிரிகளை பாதுகாக்க ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...