SPONSER

Wednesday, 4 January 2017

உங்கள் ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸை ஆன்லைன் பார்ப்பது எப்படி.?

உங்கள் ஆதார் அட்டை ஸ்டேட்டஸ் சார்ந்த தகவல்களை ஆன்லைனில் பார்ப்பது எப்படி என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏதேனும் இருப்பின், கீழ்வரும் எளிய வழிமுறைகள் அதற்கு தீர்வாய் விளங்கும்.
உங்கள் ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸை ஆன்லைன் பார்ப்பது எப்படி.?
ஒரு ஆதார் அட்டை விண்ணப்பித்தலை நிகழ்த்தியும் கூட அது இன்னும் உங்கள் கைகளுக்கு வரவில்லையா.? - கவலை வேண்டாம், மிக எளிதாக நீங்கள் ஆன்லைனில் உங்கள் ஆதார் அட்டை விண்ணப்பத்தின் நிலையை (ஸ்டேட்டஸ்) பார்க்கலாம். உங்களுக்கு தேவையானது எல்லாம் நீங்கள் ஆதார் அட்டை பெற அணுகிய சேர்க்கை மையத்தில் உங்கள் வருகைக்கு பின்னர் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டு நகல் மட்டுமே.! 

ஆதார் அட்டை என்பது இந்தியர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு அடையாள அட்டையாகும். பல அரசு நிறுவனங்களில் ஒரு அடையாள சான்றாக ஏற்கப்படும் இந்த ஆதார் அட்டை ய விண்ணப்பித்து காத்திருக்கும் நபர்களில் ஒருவாராக நீங்கள் இருப்பின் உங்களுக்கான ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸை ஆன்லைனில் பார்ப்பது எப்படி என்பதற்கான எளிய வழிமுறைகள் இதோ.! 
1. யூஐடிஏஐ (UIDAI) வலைத்தளத்தில் நுழைந்து ஆதார் அட்டை ஸ்டேட்டஸ் பக்கதினுள் நுழையவும். 
2. உங்கள் ஆதார் ஒப்புகைச் சீட்டு பாருங்கள். மேலே நீங்கள் 14 இலக்க ஐக்கிய பதிவு எண் மற்றும் ஒரு 14 இலக்க ஐக்கிய தேதி மற்றும் நேரம் பார்ப்பீர்கள்.
 3. அந்த இரண்டையும் முறையே இஐடி மற்றும் டேட் / டைம் என்ற துறைகளில் பதிவு செய்யவும்.
 4. இப்போது வலைத்தளத்தில் காட்டப்படும் பாதுகாப்பு குறியீட்டை உள்நுழைகவும்.
 5. இறுதியாக கீழே உள்ள செக் ஸ்டேட்டஸ் பட்டனை கிளிக் செய்து உங்கள் ஆதார் அட்டை நிலையை பாருங்கள்.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...