SPONSER

Thursday 19 January 2017

ஜல்லிக்கட்டு வழக்குகள் இதுவரை...

சென்னை: கடந்த, 2006 முதல் தற்போது வரை 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நடந்துள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:2016 மார்ச் 29: உயர்நீதிமன்ற மதுரை கிளை தான் முதன் முதலில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. எல்.ஷாஜி செல்லான் என்ற வழக்கறிஞர், ராநாதபுரம் மாவட்டம், தானிகோட்டம் என்றஇடத்தில், ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பானுமதி( தற்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதி),

விலங்குகள் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ், ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்தார்.                                         

தமிழக அரசு சட்டம்
2009 ஜூலை 21: ஜல்லிக்கட்டுக்காக, அப்போதைய தி.மு.க., அரசு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, ஜல்லிக்கட்டு நடத்த பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. மாவட்ட கலெக்டரின், எழுத்துபூர்வமான அனுமதி பெற வேண்டும்; 

ஒரு ஆண்டில் ஜனவரி முதல் மே மாதம் வரை எப்போது வேண்டுமானாலும் இந்த போட்டியை நடத்த அனுமதி பெற வேண்டும். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு நடத்த வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

2010 நவ.,27: தி.மு.க., அரசு கொண்டு வந்த சட்டத்தின் கீழ், சில விதிமுறைகளின்படி, ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது. போட்டியில் பங்கேற்கும் காளைகளை,விலங்குகள் நல வாரியத்திடம் பதிவு செய்ய வேண்டும். போட்டி நடக்கும் இடங்களுக்கு வாரிய பிரதிநிதிகள் வந்து பார்வையிடுவார்கள் என சுப்ரீம் கோர்ட் கூறியது.


மத்திய அரசு தடை


2011 ஜூலை 11: காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் தடுப்பு பட்டியலில், காளைகளை மத்திய சுற்றுசூழல் மற்றும வனத்துறை அமைச்சகம் சேர்த்தது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 

2014 மே 7: தி.மு.க., அரசு கொண்டு வந்த ஜல்லக்கட்டு தொடர்பான சட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. மேலும், விலங்குகள் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் காளைகளை கொண்டு வரும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 

இத்துடன், ‛இதுபோன்ற போட்டிகளில் விலங்குகள் துன்புறுத்தப்படுவது உள்ளார்ந்த விஷயமாகவே உள்ளது. இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கும் வகையில், காளைகளின் உடல்வாகு இல்லை. போட்டிகளில் காளைகள் பங்கேற்றால் துன்புறுத்தப்படும்' எனவும், சுப்ரீம் கோர்ட் கூறியது.

2016 ஜன.,7: காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் தடுப்பு பட்டியலில் இருந்து காளைகள் மற்றும் எருதுகளுக்கு விலக்கு அளித்து, ஒரு அறிவிப்பாணையை, மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதன் மூலம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டும், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் எருது போட்டியும் நடத்த வாய்ப்பு உருவானது.

எனினும், மாவட்ட கலெக்டர் அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

2016 ஜூலை 16: மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கொண்டு வந்த அறிவிப்பணையை சுப்ரீம் கோர்ட் தடை செய்தது. ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்த மீண்டும் தடை விதித்தது.




No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...