SPONSER

Tuesday 24 January 2017

பெண்களின் பாதுகாப்புக்கு உதவும் பிரதான ஆப்ஸ்.!

பெண்களுக்கு மதிப்பளிக்கும் மிகச்சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றாலும் பெண்களுக்கு முழு அளவில் இந்தியாவில் பாதுகாப்பு இருக்கின்றதா? என்று கேட்டால் வருத்தத்துடன் இல்லை என்றுதான் கூற வேண்டிய நிலை உள்
       பெண்களின் பாதுகாப்புக்கு உதவும் பிரதான ஆப்ஸ்.!

பெண்களுக்கு மதிப்பளிக்கும் மிகச்சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றாலும் பெண்களுக்கு முழு அளவில் இந்தியாவில் பாதுகாப்பு இருக்கின்றதா? என்று கேட்டால் வருத்தத்துடன் இல்லை என்றுதான் கூற வேண்டிய நிலை உள்ளது. 

அதுவும் டெல்லி மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயாவின் சம்பவத்திற்கு பின்னர் பெண்களின் பாதுகாப்பு இந்தியாவில் கேள்விக்குறியாகியுள்ளது. பெண்களை தெய்வம் என மதிப்பதும், பெண்களை பாலியல் வன்முறை செய்வதும் இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களுரில் கடந்த புத்தாண்டு தினத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட கதி என்ன? என்பதை ஊடகங்கள் மூலம் நாம் தெரிந்து கொண்டோம். இந்த ஒரு சம்பவம் மட்டுமின்றி நாட்டில் ஆங்காங்கே நாள்தோறும் நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான கொடுமை காரணமாக இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான பகுதி எது? என்பதை உறுதி செய்ய முடியாத நிலையே உள்ளது.
 இந்த நிலையில் பெண்களின் பாதுகாப்பிற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தற்போதைய மிகப்பெரிய கேள்வி பெண்களின் பாதுகாப்புக்கு வருமுன் காப்போம் என்பதுதான் சிறந்த வழி. எந்த நேரத்தில் பெண்களுக்கு ஆபத்து என்பதை அறியாக நிலையில் தற்போதைய டிஜிட்டல் டெக்னாலஜி உதவியுடன் பெண்களின் பாதுகாப்புக்கு பல புதிய அம்சங்கள் வந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் பெண்களின் பாதுகாப்புக்கான ஆப்ஸ்.
  ஏராளமான பெண்களின் பாதுகாப்பு ஆப்ஸ்கள் கொட்டி கிடக்கும் நிலையில் ஒருசில முக்கியமான ஆப்ஸ்கள் குறித்து தற்போது பார்ப்போம்
மை சேஃப்ட்டிபின்: ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த ஆப்ஸ் பெண்களின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கின்றது. பாதுகாப்பற்ற இடத்தில் நுழையும்போது இந்த ஆப்ஸ் பெண்களுக்கு எச்சரிக்கையை விடுக்கின்றது. அதுமட்டுமின்றி அந்த பகுதிக்கு சென்று கொண்டிருக்கும் உறவினர் மற்றும் நண்பர்களை உடனே அலர்ட் செய்கிறது. முன்பின் சென்றிராத இடத்திற்கு பெண்கள் செல்ல வேண்டும் என்றாலும் இந்த ஆப்ஸ்-ஐ செயல்பாட்டுக்கு கொண்டு வந்த பின்னர் தாராளமாக செல்லலாம். இந்த ஆப்ஸ் உங்களுக்கு எந்தவிதமான விரும்பத்தகாத சம்பவமும் நடைபெற விடாமல் தடுக்கும். உங்கள் மொபைல் போனில் உள்ள ஜி.பி.ஆர்.எஸ் உதவியுடன் செயல்படும் இந்த ஆப்ஸ் செயல்பட இண்டர்நெட் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
மை சேஃப்ட்டிபின்: ஆப்ஸ்
Click Here to Download the App 

ரக்ஷா ஆப்ஸ்: ஆப்ஸ்



ரக்ஷா ஆப்ஸ்: ஆப்ஸ் பெண்களின் பாதுகாப்பிற்காகவே தயாரிக்கப்பட்ட இன்னொரு முக்கிய ஆப்ஸ் இது. பாரத்சேவா.காம் என்ற இணையதளம் தயாரித்து கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த இலவச ஆப்ஸ், பலவிதமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. பாதுகாப்பற்ற பகுதியை அலர்ட் செய்வது, இந்த ஆப்ஸில் முக்கியமான காண்டாக்ட்களை பதிவு செய்து கொள்வது, 100 உள்பட முக்கியமான எண்களுக்கு உடனே டயல் செய்து உதவி கேட்பது, உதவிக்கான எஸ்.எம்.எஸ்களை உடனே அனுப்ப உதவுவது என பாதுகாப்புக்கு தேவையான பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதை கையாள்வதும் மிக எளிது. இந்த ஆப்ஸ்-ஐ ஓப்பன் செய்தவுடன் ஒரே ஒரு முறை வால்யூம் பட்டனை க்ளிக் செய்தால் முக்கிய ஆப்சன்கள் உங்கள் முன் தோன்றிவிடும் இந்த ஆப்ஸ் மூலம் ஆபத்தான் பகுதி, இருளான பகுதி, பாதுகாப்பற்ற பகுதி, ஈவ் டீசிங் அதிகம் நடைபெறும் பகுதி ஆகியவற்றை முன்கூட்டியே அறிந்து அந்த பகுதிக்கு செல்லாமல் தவிர்க்கவும் இந்த ஆப்ஸ் பெண்களுக்கு உபயோகமாக இருக்கும் Click Here to Download the App 

ஸ்மார்ட் 24x7 ஆப்ஸ்


ஸ்மார்ட் 24x7 ஆப்ஸ் மற்ற பெண்களின் பாதுகாப்பு ஆப்ஸ்களை போல் இல்லாமல் இந்த ஆப்ஸ் கொஞ்சம் வித்தியாசமானது. நீங்கள் ஆபத்தில் இருக்கின்றீர்கள் என்றால் உடனே இந்த ஆப்ஸ்-இல் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால் போதும். உடனே அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு அலர்ட் போகும் என்பதுதான் இந்த ஆப்ஸ்-இன் சிறப்பு அம்சம் ஆகும். அதுமட்டுமின்றி மருத்துவ வசதி வேண்டும் என்றாலோ, அல்லது தீயணைப்பு துறையின் சேவை தேவை என்றாலோ அதற்கேற்ற பட்டனை அழுத்தினால் அந்தந்த துறைக்கு அலர்ட் போய்விடும். இப்போதைக்கு குர்கன், சண்டிகார், ஜம்மு, மொஹாலி ஆகிய காவல் நிலையங்களிலும் உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ மற்றும் நொய்டால் அகிய தீயணைப்பு துராஇ நிலையங்களிலும் இந்த ஆப்ஸ் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இந்த ஆப்ஸ்-இன் சேவை நீட்டிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாஸ் 24 மணி நேரமும் நீங்கள் செலக்ட் செய்து வைத்துள்ள நபர்களுக்கு அலர்ட், வாய்ஸ் ரெக்கார்ட்டுகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவை செல்லும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Click Here to Download the App 

ரெட்-ஐ ஆப்ஸ்



ரெட்-ஐ ஆப்ஸ் இந்த ஆப்ஸ் நீங்கள் பாதுகாப்பற்ற அல்லது ஆபத்தான் இடங்களில் இருந்தால் உடனடியாக உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அலர்ட் தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ஸ் மட்டும்தான் SOS முறையில் செயல்படுவதால் உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உங்கள் போன் சுவிட்ச் ஆஃபில் இருந்தாலும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அலர்ட் சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த நேரமும் ஜிபிஎஸ் கனெக்சனுடன் இருக்கும் இந்த ஆப்ஸ், சரியாக நிங்கள் இருக்கும் இடத்தை டிராக் செய்து மெசேஜ் அனுப்பிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. Click Here to Download the App 

நிர்பயா ஆப்ஸ்


நிர்பயா ஆப்ஸ் ஒரே ஒரு சிங்கிள் க்ளிக்கில் உங்களுக்கு வரும் ஆபத்தை போக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிர்பயா ஆப்ஸ், நீங்கள் ஆபத்தில் இருக்கும்போது உங்களுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு அலர்ட் அனுப்புவது மட்டுமின்றி சரியான லொகேஷன் குறித்த தகவல்களையும் உடனுக்குடன் அனுப்பிவிடும். நீங்கள் ஆபத்தான நேரத்தில் இருக்கும்போது இந்த ஆப்ஸை ஓப்பன் செய்து அதன் பின்னர் அதற்குரிய ஆப்சன்களை தேடி இயக்க வேண்டிய அவசியம் இல்லை. பவர் பட்டனை சற்று நேரம் அழுத்தி கொண்டே இருந்தால் போதும், தானாகவே இந்த ஆப்ஸ் செயல்பாட்டுக்கு வந்து உங்களுடைய நண்பர்களுக்கு தகவல்களை அனுப்பிவிடும் Click Here to Download the App



No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...