சென்னை: மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டம் தொடரும் என இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்தவும், பீட்டாவை தடை செய்யக்கோரியும் மெரினாவில் இளைஞர்கள் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் அதிகளவில் மாணவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். டில்லி சென்ற முதல்வர் பன்னீர்செல்வம், டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளதால் தற்போது எதுவும் செய்ய இயலாது என தெரிவித்தார்.
இதனையடுத்து தங்களது போராட்டத்தை திரும்ப பெற முடியாது என மெரினாவில் போராட்டம் நடத்தும் வரும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தை தோல்வி:
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பேச்சுவார்த்தை நடத்தினர். விவேகானந்தர் இல்லத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...