SPONSER

Thursday 19 January 2017

தானே 'பேலன்ஸ்' செய்யும் ஹோண்டா பைக்!

ஹோண்டா பைக்!பார்ப்பவர்கள் திடுக்கிட்டு, ஆச்சரியப்படும் அளவுக்கு, விந்தையான இருசக்கர வாகனத்தை ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது

                                                    
. அந்த வண்டி, 'ஸ்டாண்ட்' போடாமல், தானாகவே சுதாரித்து நிற்கிறது. உரிமையாளர் எங்கு போனாலும், அந்த வண்டியும், நாய்க்குட்டி போல அவரை பின்தொடர்கிறது! ஏற்கனவே ஹோண்டா தயாரிக்கும், என்.சி., 750 எஸ் மாடலை வைத்தே இது உருவாக்கப்பட்டிருக்கிறது. முன் சக்கரத்தையும், அதனுடன் இணைந்த உலோகத் தண்டு ஆகியவற்றை முன்னும், பின்னும், 'தானாகவே' நகர்த்தி சமன் செய்கிறது. வண்டி தானாகவே, 'ஸ்டார்ட்' ஆகி, குறைந்த வேகத்தில் பின் தொடர்வதால், அதற்கு செயற்கை நுண்ணறிவுத் திறனும் தரப்பட்டிருக்கலாம். ஏற்கனவே சில சிறிய வாகன தயாரிப்பாளர்கள், சுயசமன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாதிரி பைக்குகளை உருவாக்கிஉள்ளனர். இப்போது, ஹோண்டா போன்ற மாபெரும் வாகன தயாரிப்பாளரே அதை உருவாக்கியிருப்பதால், இத்தொழில்நுட்பம், விரைவில் சாலைக்கு வந்துவிடும் என, எதிர்பார்க்கலாம். 'கைராஸ்கோப்' எனப்படும் மிகப் பழைய சுய சமன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், வண்டியின் எடை கூடும் என்பதால், ஹோண்டா அதை பயன்படுத்தவில்லை. மாறாக, சில ஆண்டுகளுக்கு முன், ஹோண்டா ரோபாடிக்ஸ் பிரிவு, 'யுனி கப்' என்ற ஒற்றை சக்கர வாகனத்திற்காக வடிவமைத்த தொழில்நுட்பத்தையே, இதிலும் பயன்படுத்தியிருப்பதாக ஹோண்டா அறிவித்துள்ளது. ஜப்பானில், ௬௦ வயதுக்கு மேற்பட்டோர், 33 சதவீதம் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், 83 வயதுக்கும் மேல் உயிருடன் இருப்பார்கள்! எனவே, மூத்த குடிமக்கள், பிறர் உதவியின்றி பயணிக்க உதவும் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் ஜப்பானில் அதிகரித்து வருகிறது.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...