மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கைக் காப்பாற்றுவதில் தமிழக காவல்
துறையின் பங்கு முக்கியமானது. குற்றச் செயல்களை முன்கூட்டியே திட்டமிட்டு
தடுப்பது, புலனாய்வு செய்வது, கலவரங்களை கையாள்வது, அரசின் கரங்களை
வலுப்படுத்துவது என்பது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை ஆற்றுகிறது. தமிழக
காவல் துறையில் தற்சமயம் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகள் : தமிழக காவல் துறையில் கிரேடு II பிரிவைச் சார்ந்த தமிழ்நாடு ஸ்பெஷல் போர்ஸ் படையில் கான்ஸ்டபிள் பிரிவில் ஆண் காவலர்கள் 4 ஆயிரத்து 569 பேர்களும், பெண் காவலர்கள் 46 பேரும் நிரப்பப்பட உள்ளனர். கிரேடு II பிரிவைச் சார்ந்த ஆர்ம்டு போர்ஸ் படையில் கான்ஸ்டபிள் பிரிவில் ஆண் காவலர்கள் 4 ஆயிரத்து 627 பேர்களும், பெண் காவலர்கள் 3 ஆயிரத்து 941 பேரும் நிரப்பப்பட உள்ளனர். இதன் மூலம் மொத்தம் 13 ஆயிரத்து 183 இடங்கள் நிரப்பப்படும். சிறைத் துறையில் கிரேடு II ஜெயில் வார்டர் பிரிவில் 976 ஆண் காவலர்களும், 40 பெண் காவலர்களும் சேர்த்து மொத்தம் 1016 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தீயணைப்பு பிரிவில் 1512 ஆண் காவலர்கள் என 15,711 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை எப்படி பெறுவது: ஓ.எம்.ஆர்., விண்ணப்பப் படிவங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இவற்றை அஞ்சலகங்களில் ரூ.30/- செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.135/-ஐ அஞ்சலகங்களில் செலுத்தி அப்போது தரப்படும் ரசீதை ஓ.எம்.ஆர்., படிவத்தில் உரிய இடத்தில் ஒட்டி அனுப்ப வேண்டும்.
தேர்ச்சி முறை: தமிழக காவல் துறை அறிவித்துள்ள மேற்கண்ட இடங்களுக்கான தேர்ச்சியில் எழுத்துத் தேர்வுக்கு 80 மதிப்பெண்களும், பிசிக்கல் எபீசியன்சி தேர்வுக்கு 15 மதிப்பெண்களும், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., விளையாட்டுத் தகுதிகளுக்கு 5 மதிப்பெண்களும் சேர்த்து மொத்தம் 100 மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். இந்த நிலைகளை வெற்றிகரமாகக் கடந்தால் மருத்துவப் பரிசோதனை மூலமாக இறுதி கட்ட தேர்ச்சி இருக்கும்.
தேர்வு நாள்: 21.05.2017
விண்ணப்பிக்க: தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் தங்கள் ஓ.எம்.ஆர்., விண்ணப்பப் படிவத்தை உரிய விதத்தில் முழுமையாக நிரப்பி, தேவைப்படும் ஆவணங்களையும் இணைத்து பின் வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்தின் மூலமாக அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.
Tamil Nadu Uniformed Services Recruitment Board , Old Commissioner Of Police Office Campus, Pantheon Road, Egmore, Chennai-600 008.
கடைசி நாள்: 22.02.2017
விவரங்களுக்கு: www.tnusrb.tn.gov.in

No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...