ஆதார் எண் கொண்டே பணப்பரிமாற்றம் மேற்கொள்ளலாம் - எப்படி என பார்க்கலாம் வாங்க.!
பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கிற விதமாக மத்திய அரசு பீம் ஆப்பினை
அறிமுகப்படுத்தியுள்ளது இந்த ஆப்பின் வழியே அனைவரும் பணப்பரிமாற்றம்
மேற்கொள்ளமுடியும் ஆனால் இந்த ஆப்பினை பயன்படுத்த மற்றுமோர் தேவை ஆதார் எண்
ஆகும்.ஆதார் எண் இல்லாமல் இந்த ஆப்பின் வழியே பணப்பரிமாற்றம் மேற்கொள்ள
முடியாதென மத்திய அரசின் என்பிசிஐ அறிவித்துள்ளது.பீம் ஆப்பினை போலவே
ஆன்ட்ராய்ட் பேமன்ட்ஸ் ஆப்பினை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் வழியே நீங்கள் யாருக்கு பணம் அனுப்புகிறீர்களோ அவருடைய வங்கி
கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பலாம்.ஒருவேளை யுபிஐ னுடைய விர்ச்சுவல்
பேமென்ட் அட்ரஸ் யினை நீங்கள் பணம் அனுப்பக்கூடிய கணக்காளர் கொண்டிருக்க
விட்டாலும் அதற்கு மாற்றாக வாங்கி கணக்கு எண்ணையும் வங்கியின் ஐஎப்சி எண்
போன்றவற்றை உள்ளிட்டு பணப்பரிமாற்றம் மேற்கொள்ளலாம்.
மேலும் நீங்கள் பணம் அனுப்பக்கூடிய வங்கி கணக்கினை உடையவர் அவரது
வங்கி கணக்குடன் தனது ஆதார் எண்ணினை இணைத்திருக்க வேண்டும் இல்லாவிட்டால்
பணப்பரிமாற்றம் மேற்கொள்ள இயலாது. மேலும் பீம் ஆப் பாதுகாப்புக்
காரணங்களுக்காக ஆதார் எண்ணை மட்டுமே காட்டும் அதற்கான வங்கி கணக்கு உடையவர்
பெயரைக் காட்டாது எனவே ஆதார் எண்ணை குறிப்பிடுகையில் கவனம் தேவை.
முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...