SPONSER

Thursday, 15 December 2016

டிஜிட்டல் பரிமாற்றம்: ரூ.1 கோடி பரிசு

டிஜிட்டல் பரிமாற்றம்: ரூ.1 கோடி பரிசு:
                              
                    புதுடில்லி: டிஜிட்டல் பரிமாற்றம் செய்யும் நபர் ஒருவருக்கு க்கு ஏப்ரல் 14ம் தேதி ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்படும் என நிடி ஆயோக் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நிடி ஆயோக் அமைப்பின் சி.இ.ஒ., அமிதாப் காந்த் கூறியதாவது: நுகர்வோர் மற்றும் வணிகர்கள் மத்தியில் டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்க தினசரி, வாராந்திர பரிசு வழங்கப்பட உள்ளது. நுகர்வோர்களுக்காக லக்கி கிரஹாக் யோஹஜனா, வணிகர்களுக்காக திகி தான் வியாபாரி யோஜனா என்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. தேசிய நுகர்வோர் அமைப்பு இந்த பரிசு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. 
ரூ.1 கோடி பரிசு:

லக்கி கிரஹாக் யோஜனா திட்டத்தின் கீழ், வரும் கிறிஸ்துமஸ் முதல், 2017 ஏப்ரல் 14ம் தேதி வரை தினமும் 15 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1000 பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும், வாரந்தோறும், 7 ஆயிரம் பேருக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். இந்த திட்டமும் கிறிஸ்துமஸ் முதல் 2017 ஏப்ரல் 14ம் தேதி வரை செயல்படுத்தப்படும். பின்னர் 2017 ஏப்ரல் 14ம் தேதி மெகா பரிசு அறிவிக்கப்படும். முதல் பரிசாக ரூ.1 கோடியும், இரண்டாம் பரிசாக ரூ.50 லட்சமும், 3வது பரிசாக ரூ.25 லட்சமும் அறிவிக்கப்படும்.
வணிகர்களுக்கு:

திகி தான் வியாபாரி யோஜனா திட்டத்தின் கீழ், கிறிஸ்துமஸ் முதல் 2017 ஏப்ரல் 14 வரை வாரந்தோறும் 7 ஆயிரம் வணிகர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும். ஏப்ரல் 14ம் தேதிக்கு நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு மெகா பரிசு வழங்கப்படும் என்றார்.



x

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...