SPONSER

Tuesday, 27 December 2016

இ- சேவையில் 16 வகை சான்றுகள் வழங்க ஏற்பாடு:வி.ஏ.ஓ.,க்களுக்கு வருவாய்த்துறை பயிற்சி

சின்னாளபட்டி,:இ--சேவை மையங்கள் மூலம் மேலும் 16 வகை சான்றுகள் வழங்கப்பட உள்ளதால், வி.ஏ.ஓ.,க்களை தேடி அலைக்கழிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு குறையும்.மத்திய, மாநில அரசின் சலுகைகளைப் பெற, வருவாய்துறையின் சான்றுகள் அவசியம். கல்வி, வருவாய், வசிப்பிடம், சார்ந்தோர், வருவாய், சொந்த இடம் உள்ளிட்ட தனிநபர் பின்புலம் உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக, விசாரணை நடத்தி அதன்பின் இவை வழங்கப்படுகின்றன. கிராம நிர்வாக அலுவலகங்கள் (வி.ஏ.ஓ.,க்கள்) மூலம் நேரில் விண்ணப்பித்து பரிந்துரை பெறுவது, வருவாய் ஆய்வாளர், தாசில்தார் என அதிகாரிகளை சந்தித்து சான்றிதழைப் பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

நான்கு வகை சான்று: இச்சூழலில், சில மாதங்களுக்கு முன், வருவாய்துறை சார்ந்த சான்றுகளை பெற, இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகமானது. இருப்பிடம், பிறப்பிடம், சாதி, முதல் தலைமுறை பட்டதாரி குடும்பம் உள்ளிட்ட சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாவட்ட இ--சேவை மையங்கள் மட்டுமின்றி தாலுகா, கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. அங்கு விண்ணப்பித்து வருவதால், அலைக்கழிப்பு ஓரளவு குறைந்துள்ளது. இடைத்தரகர்களின் வசூல் ஆதிக்கமும் குறைந்துள்ளது.மேலும் 16வகை சான்றுகள்: இந்நிலையில், மேலும் 16 வகையான சான்றுகள் இப்பட்டியலில் இணைக்கப்பட உள்ளன.

 வருவாய்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏற்கனவே 4 வகையான சான்றுகள் வழங்கப்படுகின்றன. தற்போது விவசாய வருவாய்,
சிறு, குறு விவசாயி, இதர பிற்பட்டோர், வாரிசு, இடம்பெயர்வு, சான்றிதழ் மீளப்பெறமுடியாமை சான்று, கணவரால் கைவிடப்பட்ட பெண், சொத்து மதிப்பு, ஆண் வாரிசு இல்லாதது, பணியில் இல்லை, 'பான்' தரகர் உரிமம், மணி லெண்டர் உரிமம், திருமணமாகாதவர், விதவை, கலப்பு திருமணம் ஆகியவற்றிற்கான சான்றுகளும் இப்பட்டியலில் இணைக்கப்பட உள்ளன. இந்த சான்றிதழ்களில் முறைகேடுகளை தவிர்க்க, விண்ணப்பதாரரின் போட்டோவுடன் சான்றுகள் வழங்கப்படும், என்றார்.இச்சேவை, அடுத்த மாதத்தில் (ஜனவரி, 2017) இருந்து துவங்கப்பட உள்ளது. இதற்காக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...