SPONSER

Tuesday, 13 December 2016

NEWS

புயல் மீட்பு பணிக்கு கடற்படை கப்பல்கள் சென்னை வந்தன தயார் நிலையில் ராணுவம், பேரிடர் மீட்பு குழு:

                                   விசாகப்பட்டினம்,
புயல் எச்சரிக்கையையொட்டி மீட்பு பணிக்கு 2 கடற்படை கப்பல்கள் நேற்று சென்னைக்கு வந்தன. தயார் நிலையில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் இருந்தனர்.
கடற்படை கப்பல்கள்
வங்ககடலில் உருவான வார்தா புயலால் சென்னையில் பலத்த காற்றுடன் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று முழுவதும் பலத்த மழை பெய்தது. புயல் காற்றால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் விழுந்தன. பஸ், ரெயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பல விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
புயலால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மீட்பு பணி மற்றும் நிவாரண உதவிக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று அதிகாலை இந்திய கடற்படையின் சிவாலிக், காட்மாட் ஆகிய 2 கப்பல்கள் புறப்பட்டன. அந்த கப்பல்கள் சென்னைக்கு வடக்கே நிறுத்தப்பட்டன.
நிவாரண பொருட்கள்
கடற்படை கப்பல்களில் மிதவை ரப்பர் படகுகள், சிறிய ரக கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், உணவு, கூடாரங்கள் அமைக்க தேவையான உபகரணங்கள், துணிகள், மருந்துகள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் போதுமான வகையில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. மேலும் அந்த கப்பல்களில் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர், நீச்சல் வீரர்களும் மனிதநேய உதவி மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வந்திருந்தனர்.
கடற்படை கப்பல்களில் நீச்சல் வீரர்கள் அடங்கிய 10 குழுவினர் உள்ளனர். அது தவிர தமிழகம் மற்றும், புதுச்சேரியில் 6 குழுவினர் தயாராக இருந்தனர். மேலும் தேவைப்பட்டால் 30 குழுவினர் விசாகப்பட்டினத்தில் இருந்து உடனடியாக அழைக்கப்படுவார்கள் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேரிடர் மீட்பு குழு
கடற்படையை தவிர இந்திய ராணுவப்படையின் 6 குழுக்களும் தயார் நிலையில் இருந்தனர். அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்படை விமானதளம் மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள தேகா கடற்படை விமானதளத்தில் கடற்படை ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
இவர்களுடன் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நிவாரண பணியில் தயாராக இருந்தனர். 8 குழுவினர் தமிழ்நாட்டுக்கும், 7 குழுவினர் ஆந்திர பிரதேசத்துக்கும், ஒரு குழு புதுச்சேரிக்கும் அனுப்பப்பட்டனர்.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...