பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் முயற்சி முறியடிப்பு ரூ.73 லட்சத்துக்கு புதிய 2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் 5 பேர் கைது:
மும்பை,
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் முயற்சியை போலீசார் முறியடித்து, ரூ.73 லட்சத்துக்கு புதிய 2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்தனர்.
காரில் ரூ.85 லட்சம்மும்பை தாதர் கிழக்கு, இந்து காலனி டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சாலையில் ஒரு கும்பல் காரில் அதிகளவில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வருவதாக குர்லா குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் மதியம் அங்கு சாதாரண உடையில் சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்து நின்ற காரில் இருந்த 5 பேரை போலீசார் பிடித்தனர். மேலும் காரிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின் போது காரில் கட்டு, கட்டமாக ரூபாய் நோட்டுகள் சிக்கின. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து எண்ணி பார்த்தபோது மொத்தம் ரூ.85 லட்சம் இருந்தது தெரியவந்தது.
5 பேர் கைதுஇதில், ரூ.73 லட்சத்திற்கான புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும், ரூ.12 லட்சத்திற்கான நூறு ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
இதையடுத்து காரில் இருந்த 5 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், இவர்கள் ரூ.1 கோடி கொண்டு வந்து இருக்கிறார்கள். வழியில் யாரிடமோ ரூ.15 லட்சத்தை கொடுத்து உள்ளனர். மீதி ரூ.85 லட்சத்தை பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு கமிஷன் அடிப்படையில் மாற்றி கொடுக்க முயன்றது தெரியவந்தது.
இவர்களுக்கு எப்படி இவ்வளவு புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைத்தது?. பழைய ரூபாய் நோட்டுகளை அங்கு கொண்டு வர இருந்தது யார்? என்பதை கண்டறிய போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...