SPONSER

Sunday 25 December 2016

ஐபோன் சார்ஜர்கள் கவனம்- ANDROID NEWS CLICK HERE

ஐபோன்களுக்கான சார்ஜர்கள் நாளடைவில் பழுதாகும்போது, அதனிடத்தில் வேறு புதிய சார்ஜர் வாங்கச் சென்றால், அதற்கான விலை மிக அதிகம் என அனைவரும் உணர்கின்றனர். போனுடன் சேர்த்து தரப்படும்போது அதற்கான விலை தெரிவதில்லை. விலை அதிகம் என எண்ணுவதால், சந்தையில், வேறு நிறுவனங்களால் தயாரித்து வழங்கப்படும் சார்ஜர்களைக் குறைந்த விலைக்கு வாங்கிப் பயன்படுத்தத் துணிகின்றனர். அவை தொடக்கத்தில் நன்றாகச் செயல்படுகின்றன. பின்னர், விரைவில் செயல் இழக்கின்றன. சிறிது காலம் நன்றாகச் செயல்பட்டாலும், அவை ஐபோனுக்குக் கெடுதல் என பிரிட்டனில் இயங்கும் Chartered Trading Standards Institute என்னும் தர நிர்ணய அமைப்பு அறிவித்துள்ளது. இந்த அமைப்பு, அண்மையில், ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கு உபரி சாதனங்களைத் தயாரித்துத் தரும் 400 நிறுவனங்களின் சாதனங்களை வாங்கி சோதனை செய்தது. இவை ஆஸ்திரேலியா, கனடா, சீனா, இலங்கை, தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தயார் செய்தவை. 400 சாதனங்களில், மூன்றே மூன்று மட்டுமே, மின்சக்தியைச் சரியாக வாங்கி போன்களுக்கு வழங்கின. மற்றவை அனைத்தும், ஐபோன் பேட்டரிகளுக்குக் கெடுதலையே விளைவித்தன. இந்த கெடுதல் வேலைகள் உடனடியாக வெளியே தெரியாது. நாட்கள் செல்லச் செல்ல, பேட்டரிகள் கெட்டுப் போய், அவற்றையும் மாற்ற வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். அப்போது அதற்கான விலை மிக அதிகமாக இருக்கும். 
                                 




நம்மில் பெரும்பாலானவர்கள், இணைய வர்த்தக தளங்களில் வாங்கப்படுபவை அனைத்தும் தரமானவை என்று எண்ணி, அவற்றிலிருந்து வாங்குகிறோம். ஆப்பிள் நிறுவன சாதனங்கள், குறிப்பாக ஐபோனைப் பொறுத்தவரை, ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளே, ஐபோனுக்குப் பாதுகாப்பு வழங்கக் கூடியவை. எனவே, நம்பிக்கை தரக்கூடிய, ஆப்பிள் நிறுவனத்தின் அத்தாட்சி பெற்ற இணைய தளங்களிலிருந்தே இந்த துணை சாதனங்களை வாங்க வேண்டும். 
சென்ற அக்டோபர் மாதம், ஆப்பிள் நிறுவனம், புரூக்லின் நகரில் இயங்கும் Mobile Star LLC என்ற நிறுவனத்தின் மீது, இது போன்ற தான் காப்புரிமை பெற்ற சாதனங்களைத் தயாரித்து விற்பனை செய்வதாக வழக்கு தொடுத்தது. அந்த சாதனங்களை, முதல் இடத்தில் இயங்கும் அமேஸான் வர்த்தக இணைய தளம் விற்பனை செய்து வந்தது. சென்ற மார்ச் மாதம், அமேஸான் நிறுவனமே, தான் விற்பனை செய்து வந்த பல நிறுவனங்களின் தயாரிப்புகள் சரியானவை அல்ல என்று தன் விற்பனையிலிருந்து விலக்கியது. 
பிற நிறுவனங்களின் சார்ஜர்களில் அமைந்துள்ள சார்ஜர் பின்கள் சரியாக இருப்பதில்லை. இதனால், போன் மற்றும் பாட்டரியின் வெப்பம் அதிகரித்து, அவற்றிற்கு கேடு விளைவிக்கின்றன. போன் செயல்படா நிலைக்குத் தள்ளப்படும். பிற நிறுவனங்களின் சாதனங்கள், சில வேளைகளில் நாம் நம் உடலுக்கு ஊறு ஏற்படுத்தும் ஆபத்தான விளைவுகளையும் உருவாக்குகின்றன. 

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...