SPONSER

Sunday 25 December 2016

காசினியின் கடைசி பயணம்!

அமெரிக்க விண்வெளி அமைப்பான, 'நாசா' அனுப்பிய காசினி விண்கலம், சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையங்களை நெருங்கி அருமையான படங்களை எடுத்து அனுப்பியிருக்கிறது. 





 கடந்த சில வாரங்களாக, சனி கிரகத்தின் துருவங்களை படமெடுத்த காசினி, பின் தன் பார்வையை சனி வளையங்களை நோக்கி திருப்பியது. இன்னும் சில வாரங்கள் அந்த விண்கலம், சனியின் பல வளையங்களை மிக அருகாமையில் சென்று படம் பிடித்து அனுப்பும். இதுவரை பூமிக்கு இவ்வளவு தெளிவான, நெருக்கமான சனி வளையப் படங்களை எந்த விண்கலனும், தொலை நோக்கியும் படமெடுத்ததில்லை என, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சனி கிரகத்தை விரிவாக ஆராய்ச்சி செய்வதற்காக, 1997ல் அனுப்பப்பட்ட காசினி விண்கலம், 18 ஆண்டுகள், 3 மாதங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. அணு சக்தியால் இயங்கும் காசினி, சனி வளையங்களை மேலும் நெருக்கமாக கடந்து சென்று படங்களையும் தகவல்களையும் பூமிக்கு அனுப்பும். சனியை, சுற்றி வரும், 'என்சிலாடஸ்' என்ற நிலாவையும், காசினி நெருக்கமாக ஆராய்ந்து படங்களை அனுப்பியுள்ளது. காசினி விண்கலத்தை, வரும், 2017 செப்டம்பர் 15 அன்று, சனி கிரகத்தின் மீது மோதி எரித்துவிட விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். காசினியின் மீது உயிரித் தொற்று ஏற்பட்டிருக்கலாம்என்பதால்தான் இந்த ஏற்பாடு என நாசா தெரிவித்துள்ளது.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...