SPONSER

Sunday 25 December 2016

பொருளாதாரம் வளர ரொக்கமில்லா பரிமாற்றம்: ஜெட்லி உறுதி

புதுடில்லி: இந்திய பொருளாதாரம் வளர ரொக்கமில்லா பரிமாற்றமே வழி என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.           
                                             
மொபைல் எண் அதிகம்:
டில்லியில் உள்ள விஜய் பவனில் நடந்த நிகழ்ச்சியில் ஜெட்லி பேசியதாவது: ரொக்கமில்லா பரிமாற்றமே, இந்திய பொருளாதாரம் வளர்வதற்கான வழியாகும். சர்வதேச அளவில் மந்த நிலை இருந்தாலும் இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.சர்வதேச அளவில் இந்தியா சிறப்பான நிலையில் உள்ளது என்பதை உலக நாடுகள் உணர்ந்து வருகினறன. கார்டுகளோ, மொபைல் போன்கள் இல்லாதவர்களுக்கு ஆதார் அடிப்படையிலான பரிமாற்றம் உதவும். இதற்கு அவர்களின் கைவிரல் ரேகை மூலம் பணப்பரிமாற்றம் செய்யலாம். கடந்த இரண்டு வருடங்களில், இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டு மக்கள் தொகை எண்களுக்கு இணையாக மொபைல் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

தீர்வு:
பொருளாதாரம் முழு அளவில் இயங்கும்போது, நேர்மையான மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும். வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விபரங்களை பெற பல நாடுகளுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. ரொக்கமில்லா பரிமாற்றம் என்பதன் நோக்கம், குறைந்தளவு ரொக்கம் பயன்படுத்துவதாகும், முழுவதும் ரொக்கம் பயன்படுத்தக்கூடாது என்பதல்ல. ஆனால் சில அரசியல் கட்சிகளும், மீடியாக்களும் தவறாக தகவல்தருகின்றன என்றார்.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...