கடலுார்: பண தட்டுப்பாட்டை போக்க வங்கிகளுக்கு ஓரளவு ரிசர்வ் வங்கி பணம் வழங்கி வருவதால் தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் உள்ள கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும் தீவிரவாதிகள் கையில் உள்ள கள்ள நோட்டுக்களை ஒழிப்பதற்காகவும் மத்திய அரசு கடந்த மாதம் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்ற இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே உள்ளன.
எதிர்பார்த்த அளவை விட கூடுதல் அளவில் வங்கியில் டிபாசிட் தொகை சேர்ந்து வருகிறது. அதற்கு இணையாக வங்கிகளால் புதிய பணத்தை கொடுக்க முடியவில்லை. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் படி இன்னும் பணம் பட்டுவாடா செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு 4000 ரூபாயும், ஒரு சில வங்கிகளில் 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வங்கியில் பணத்தை வாடிக்கையாளர்களிடம் கொடுப்பதை விட, அனைவரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாறுங்கள் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்காக சில சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பொதுமக்கள் உடனடியாக டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாற முடியாமல் தவித்து வருகின்றனர். நேற்று ஸ்டேட் பாங்க்கில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. பணத்தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருவதால் மக்கள் விரும்பிய பணத்தை எடுக்க முடியவில்லை.
இதனால் மக்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் நிலை தொடர் கதையாக உள்ளது. பழைய பணம் டிபாசிட் செய்த அளவுக்கு புதிய பணம் அச்சடிக்கப்படவில்லை.
இதற்காக வெளிநாடுகளில் பணம் அச்சடிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. நிலைமை சீரடையாமல் தொடர்ந்து நீடிப்பதால் வங்கி ஊழியர் சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன. இதற்கிடையே மத்திய ரிசர்வ் வங்கி கடலுார் மாவட்டத்திற்கென வாரம் 10 முதல் 12 கோடி ரூபாய் அளவில் பணம் வழங்கி வருகிறது. பணம் தட்டுப்பாடு நீடித்து வந்த வங்கிகளுக்கு தற்போது பணம் வழங்கி வருவது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...