SPONSER

Tuesday 20 December 2016

டிஜிட்டல்' கிராம திட்டம்: விரைவில் துவக்கம்

டிஜிட்டல்' கிராம திட்டம்: விரைவில் துவக்கம்






புதுடில்லி : மத்திய அரசு விரைவில் 'டிஜிட்டல்' கிராம திட்டத்தை மத்திய அரசு துவக்க இருக்கிறது. இதன் மூலம் கிராமப் பகுதிகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சேவைகள் அளிக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.


‛டிஜிட்டல்' கிராமங்கள் :



டில்லியில் நடைபெற்ற ‛டிஜிட்டல்' இந்தியா திட்ட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்ததாவது: அனைத்து நவீன வசதிகளும் உடைய, 100 டிஜிட்டல் கிராமங்கள் குறித்த அறிவிப்பு விரைவில்
வெளியாகும். இந்த கிராமங்களில் கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளுடன் உலக தரத்தில், 'வைபை' வசதி வழங்கப்படும்; தகவல் தொழில்நுட்ப தொடர்பு முழுமையாக ஏற்படுத்தப்படும்; இவை, நாட்டின் முன் மாதிரி கிராமங்களாக திகழும்.


சிறப்பு பயிற்சி :



இந்தியாவை ‛டிஜிட்டல்' மயமாக்க மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, அரசு அதிகாரிகள் உட்பட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இன்டர்நெட் வழியாக ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு மத்திய அரசு சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறது. அதன்படி, கடந்த 4 நாள்களில் 18 லட்சம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர். 2017, மார்ச் மாதத்துக்குள் 1.25 கோடி பேருக்கு பயற்சி அளிக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...