SPONSER

Sunday 25 December 2016

ஜெ., மரணத்தில் சந்தேகம்நீதி விசாரணை கோரி வழக்கு

புதுடில்லி, : 'மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், அது பற்றி நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' என வலியுறுத்தி, சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

                                     Image result for JAYALAITHA IMAGE
மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட, செப்., 22 முதல், மரணமடைந்த, டிச., 5 வரை நடந்த சம்பவங்கள் அனைத்தும் மர்மமாக 
உள்ளன. அவரை பார்க்க, உறவினர்கள் உட்பட யாரையும் அனுமதிக்கவில்லை. அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விபரமும், உறுதியாக தெரியவில்லை; நலம் பெற்று வருவதாக, அவ்வப்போது, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கைகள் தரப்பட்டன. மருத்துவமனையில் இருந்தபடியே, அவர் பல முடிவுகளை எடுத்ததாகவும், பல உத்தரவுகளை பிறப்பித்ததாகவும் கூறி பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்தன. திடீரென, அவர் இறந்து விட்டதாக அறிவிப்பு வெளியானது.
தமிழகத்தின் முதல்வராக இருந்த ஒருவருக்கு என்ன நடந்தது என்ற விபரம், இன்று வரை மர்மமாக உள்ளது. அவரது மரணத்தில் உள்ள சந்தேகம் விலகும் வகையில், இது பற்றி, நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க., அதிருப்தி, எம்.பி., சசிகலா புஷ்பா தாக்கல் செய்துள்ள மனுவுடன் சேர்த்து, இந்த வழக்கும், 2017,ஜன., 6ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...