SPONSER

Sunday 25 December 2016

‛பணால்' ஆகப்போகும் பினாமி சொத்துக்கள்: மோடியின் அடுத்த ‛ஆப்பு' ரெடி

புதுடில்லி: பினாமி சொத்துகளுக்கு எதிராக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாகவும் கூறினார்.

               

மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் தொடர்பாக, மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கவே அவ்வபோது அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. கறுப்பு பணத்திற்கு எதிரான போர் பொது மக்கள் ஒத்துழைப்புடன் வெற்றியடைந்துள்ளது. பொது மக்கள் தரும் தகவல் காரணமாக கறுப்பு பணம் பதுக்குவோர் தொடர்ச்சியாக சிக்கி வருகின்றனர். இது முடிவு அல்ல. கறுப்பு பணம் மற்றும் முறைகேடுக்கு எதிரான போரின் துவக்க கட்டமே ஆகும். இந்த போராட்டத்தில் இருந்து பின் வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. அனைவரும் சட்டத்தின் முன் சமம். பினாமி சொத்துகளுக்கு எதிராக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் எனக்கூறினார். 

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...