எம்.எல்.ஏ.,வின் பாதுகாவலர் வங்கி கணக்கில் ரூ.100 கோடி!
U
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி எம்.எல்.ஏ.,வின் பாதுகாவலர் அவரது வங்கி கணக்கில் திடீரென 100 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஷிஷாமாவோ சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., இர்பான் சோலங்கி. சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர். இவரின் பாதுகாவலராக குலாம் ஜிலானி என்பவர் பணிபுரிகிறார். இவருக்கு, மால் ரோடு எஸ்.பி.ஐ., கிளையில் வங்கிக் கணக்கு உள்ளது.
செவ்வாய் கிழமை இரவு, தனது கணக்கில் இருந்து பணம் எடுக்க குலாம் ஏ.டி.எம் மையத்துக்குச் சென்றார். பணம் எடுத்த பிறகு, தனது கணக்கில் உள்ள மீதத் தொகை, ரூ.99,99,02,724 இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து, எம்.எல்.ஏ., சோலங்கியிடம் தெரிவித்தார். சோலங்கி மூலமாக கான்பூர் மாவட்ட ஆட்சியர் கவுஷல் ராஜ் சர்மாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குலாமின் வங்கி கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குஷிநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த குலாம், கான்பூர் நகரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, எம்.எல்.ஏவிடம் வேலை பார்த்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...