சொன்னார் தோனி; வீரராக தொடர விருப்பம்
துடில்லி : 'டுவென்டி-20', ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து திடீரென விலகினார் தோனி. வீரராக அணியில் நீடிப்பார். இனி மூன்றுவிதமான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக கோஹ்லி செயல்படுவார்.
வெற்றிக் கேப்டன்:
இந்திய அணியின் வெற்றிக் கேப்டன் தோனி, 35. கடந்த 2004ல் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 'பேட்டிங்', 'கீப்பிங்கில்' பட்டையை கிளப்பிய இவர், மிக விரைவாக சிகரங்களை தொட்டார். 2007ல் இவரது தலைமையிலான இந்திய அணி 'டுவென்டி-20' உலக கோப்பை வென்றது. தொடர்ந்து 2011ல் 50 ஓவர் உலக கோப்பையை வென்று காட்டினார்.
டெஸ்டில் ஓய்வு:
டெஸ்ட் 'ரேங்கிங்' பட்டியலில் இந்திய அணியை 'நம்பர்-1' இடத்திற்கு அழைத்துச் சென்றார். இருப்பினும் டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து இவரால் சோபிக்க முடியவில்லை. இதையடுத்து 2014, டிச. 30ல் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
விலகல்:
இந்நிலையில், ஒருநாள் மற்றும் 'டுவென்டி-20' போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக நேற்று அறிவித்தார். அணியில் வீரராக நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக உள்ள விராத் கோஹ்லி இனி அனைத்து போட்டிகளுக்கும் தலைமை ஏற்பார் எனத் தெரிகிறது.
அடுத்து ஓய்வு:
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நாளை தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த நேரத்தில் தோனியின் முடிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. களத்தில் பதட்டப்படாமல் மிகவும் 'கூலாக' செயல்படும் இவர், இங்கிலாந்து தொடருடன் அனேகமாக கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவார் எனத் தெரிகிறது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி கூறுகையில்,''தோனி தலைமையில் நமது அணி பல்வேறு சாதனைகளை படைத்து உள்ளது. இந்திய கிரிக்கெட் வளர்ச்சியில் மகத்தான பங்களிப்பை தந்துள்ளார். இதற்காக ரசிகர்கள் சார்பில் நன்றி,''என்றார்.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...