தமிழகத்தில் 5.92 கோடி வாக்காளர்கள்; இறுதிப் பட்டியல் நாளை வெளியீடு
சென்னை: வாக்காளர் சிறப்பு திருத்தத்தை அடுத்து தமிழகத்தில் 5.92 கோடி வாக்காளர்கள் இருப்பதாக என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடபடுகிறது.
இதுகுறித்து, தேர்தல் ஆணையம் கூறியருப்பதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2017-ன் இறுதிப்பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. 2016-ம் ஆண்டை காட்டிலும் 2017-ல் 10.22 லட்சம் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.93 கோடி பேர் , பெண் வாக்காளர்கள் 2.99 கோடி பேர், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5,040 பேர். மொத்த வாக்காளர்கள் 5.92 கோடி பேர்.
அடையாள அட்டை
ஓட்டுசாவடி அலுவலர்கள் மூலம் பிப்.,10-ம் தேதி முதல் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் பட்டியலை http// elections.tn.gov.in என்ற இணைய தளத்திலும் காணலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சோழிங்கநல்லுார் முதலிடம்
அதிகபட்சமாக, சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.22 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மேலும் குறைந்த பட்சமாக, கீழவேளூர் தொகுதியில் 1.22 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...