போர்ப்ஸ் சாதனையாளர்கள் பட்டியலில் 30 இளம் இந்தியர்கள்
நியூயார்க் : உலகை மாற்றிய சாதனையாளர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 30 க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 பேர் சுகாதாரம், உற்பத்தி, விளையாட்டு, வர்த்தகம் உள்ளிட்ட 20 துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகும். இவர்கள் அனைவரும் தங்களின் துறைகளில் அடுத்த தலைமுறைக்கு பயன்படும் வகையில், புதிய கண்டுபிடிப்புக்கள், கல்விமுறைகள் உள்ளிட்டவைகளை மேற்கொண்டவர்கள் ஆவர்.
போட்டோதெரபி டிவைஸ்களை பயன்படுத்தி மஞ்சள் காமாலை, ஹைபோதெரமியா ஆகிய நோய்களை குணப்படுத்தும் முறையை கண்டுபிடித்த நியோலைட் நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான விவேக் கோப்பர்தி(27), அவசர காலத்தில் மருந்துகளை கொண்டு செல்ல டிரோன்களை பயன்படுத்தும் முறையை உருவாக்கிய பிரார்த்தனா தேசாய் (27), மொபைல் ஆப்ஸ்களை பயன்படுத்தி அறுவை சிகிச்சை தொடர்பாக ஒரு டாக்டர் மற்றொருவரிடம் ஆலோசிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை ஏற்படுத்தி ஷான் பட்டேல் (28) உள்ளிட்டோர் போர்ப்சின் சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...