SPONSER

Tuesday, 10 January 2017

கணக்கில் வராத ரூ.4 லட்சம் கோடி வங்கிகளில் டிபாசிட்

கணக்கில் வராத ரூ.4 லட்சம் கோடி வங்கிகளில் டிபாசிட்



புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு, கணக்கில் வராத 3 - 4 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.
விசாரணை:


இது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த நவ. 8ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது. இதன் பிறகு வங்கிகளில் மட்டும் கணக்கில் வராத 3 - 4 லட்சம் கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு 60 லட்சம் வங்கிக்கணக்குகளில் தலா ரூ. 2 லட்சம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.
செயல்படாத கணக்கில்...


நவம்பர் 9 ம் தேதி முதல், வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு வங்கிக்கணக்குகளில் ரூ.10,700 கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பல கணக்குகளில் ரூ.16 ஆயிரம் கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. செயல்படாத வங்கி கணக்கில் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது 

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...