Justin  Angel எனும் நோக்கியாவில் பணியாற்றும் பொறியாளர் விண்டோஸ் 8 இயக்குதலத்தில் உள்ள பணம் கட்டி விளையாடும் விளையாட்டுக்களில் பணம் செலுத்தாமல் பல வசதிகளை அனுபவிக்கும் குறுக்கு வழிகள் பற்றிய குறிப்புகளை தனது தளத்தில் வெளியிட்டார். அவர் வெளியிட்ட சில மணி நேரங்களில் அவரின் தளம் வேலை செய்யவில்லை. ஆனால் அவரின் பக்கத்தை Google Cache மூலம் பார்த்து தகவல்களை தெரிந்துகொள்ள நாம் முற்பட்ட போது Googleலும் அந்தப் பக்கத்தை நீக்கிவிட்டது.  இந்த விசயத்தில் Google  Microsoftக்கு உதவும் வகையில் செயல்பட்டுள்ளது.
ஆனால், Windows 8 apps  reverse engineering செய்யும் வழிமுறைகள் இன்னும் காணக் கிடைக்கப்படுகின்றன. Reverse Engineering என்பது ஒரு மென்பொருளை சிறு சிறு துண்டுகளாக உடைத்து அதன் மூல நிரலை (Source Code) அறிய முற்படும் ஒரு வழிமுறை.
மைக்ரோசோப்ட் நிறுவனமும் நோக்கியா நிறுவனமும் கடந்த சில ஆண்டுகளாக கைகோர்த்து பல வன் / மென்பொருள்களை விற்று வருகின்றன. நோக்கியா நிறுவனம் அடைந்த கடும் நட்டம் காரணமாக பல பொரியாளர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இவரும் வேலையில் இருந்து போய்விட்டாரா அல்லது விரக்தியால் இந்த வழிமுறைகளை வெளியே தெரிய வைத்துள்ளாரா என சில தினங்களில் தெரிய வரும்.
 
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...