ஐஸ்வர்யாராய் தான் எனது முதல் சாய்ஸ். ஜெயலலிதா கூறியது ஏன்???
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் தாசரி நாராயண ராவ் இயக்கவுள்ளதாகவும், இதற்காகவே இவர் 'அம்மா' என்ற தலைப்பை ரிஜிஸ்தர் செய்துள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் த்ரிஷா அல்லது ரம்யா கிருஷ்ணன் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 1999ஆம் ஆண்டு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தில் இளம் வயது கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யாராய் பொருத்தமாக இருப்பார் என்றும் ஆனால் தன்னுடைய தற்போதைய வயதிற்கும், எதிர்கால வயதிற்கும் அவர் பொருத்தமாக இருப்பார் என்று கூறுவது கடினம்தான் என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த பேட்டி அளித்து 17 வருடங்கள் ஆகிவிட்டது. இன்றைய சூழ்நிலையில் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யாராய் பொருத்தமாக இருப்பார் என்றே கருதப்படுகிறது. ஏற்கனவே மணிரத்னம் நடித்த 'இருவர்' படத்தில் ஐஸ்வர்யா நடித்த இரண்டு கேரக்டர்களில் ஒரு கேரக்டர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...