SPONSER

Thursday 19 January 2017

ராணுவத்தினருக்கு தரமற்ற உணவா? : மத்திய அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

புதுடில்லி: பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு அளிக்கப்படும் உணவு குறித்த அறிக்கை கோரும் மனு தொடர்பாக, பதில் அளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.எல்லை பகுதிகளில், பாதுகாவல் பணிகளில் ஈடுபடும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு, மிக மோசமான உணவு தரப்படுவதாகவும், பல நாட்கள் பசியுடன் துாங்கச் செல்வதாகவும், சில வீரர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர். இந்த விவகாரம், சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு அளிக்கப்படும் உணவு குறித்த அறிக்கையை, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடும்படி உத்தரவிடக் கோரி, டில்லி ஐகோர்ட்டில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு, டில்லி ஐகோர்ட் நீதிபதிகள், ஜி.ரோஹினி, சங்கீதா திங்ரா ஷெகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டனர். எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ்,
அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றுக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...