மதுரை : மதுரை, எல்லீஸ்நகர் பகுதியில் மொபைல் போன் டவர் மீது ஏறி கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
எல்லீஸ்நகர் பகுதியில் உள்ள மொபைல் போன் டவர் மீது காலை, 6 மணியளவில் கல்லூரி மாணவர்கள், 6 பேர் ஏறினர். இவர்கள் தங்கள் நண்பர்களை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, ‛ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த உடனடியாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். பீட்டாவை தடை செய்ய வேண்டும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும்' என தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டம் குறித்த தகவல் பரவியதும், அப்பகுதியில் மாணவர்களுக்கு ஆதரவாக பலரும் திரண்டுள்ளனர். மொபைல் போன் டவரின் கீழ் அமர்ந்து மாணவர்களுக்கு ஆதரவாக பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தை கைவிட்டு, கீழே இறங்கும் படி மாணவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் மாணவர்கள் போராட்டத்தை தொடர்வதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...