சென்னை : மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் ஒரு போலீஸ் எஸ்.ஐ., சீருடையுடன் வந்து, தனது ஆதரவை தெரிவித்தார். இதனால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. மதுரையில் மாணவர்கள் தமுக்கம் மைதானத்தில் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கு பணியில் இருந்த டிராபிக் எஸ்.ஐ., சேகர,ன் சீருடையுடன் போராட்டம் நடத்திய மாணவர்கள் மத்தியில் வந்தார். இந்த போராட்டத்திற்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன் என அனைவரையும் பார்த்து கை கூப்பி வணங்கினார்.
மெய்சிலிர்க்க வைக்கிறது;
தொடர்ந்து அவர் பேசுகையில் ; இந்த போராட்டம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. எனது பணியே போனாலும் , பரவாயில்லை . நான் உங்களோடு நிற்பேன் என்றார்.
மாணவர்கள் கரகோஷம் எழுப்பினர். தொடர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் , அய்யா நீங்கள் சீருடை போட்டுள்ளீர்கள் . ஆதலால் நீங்கள் போராட வேண்டாம். உங்கள் சார்பில் உங்கள் குடும்பத்தை சேர்ந்த மகன், மகள்களை எங்கள் போராட்டத்தில் சேர வையுங்கள் என கூறி எஸ்.ஐ.,யை வழி அனுப்பி வைத்தனர். எஸ்.ஐ., அளித்த ஆதரவால் மாணவர்கள் மேலும் உற்சாகமடைந்தனர்.

No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...