அம்பலம்? ஜெ., மரணம் தொடர்பான மர்மங்கள் விரைவில்... சிகிச்சை விபரங்களை வெளியிட அப்பல்லோ தயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பான விசாரணை
சென்னை:ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்கள், விரைவில் அம்பலமாகும் சூழல் உருவாகியுள்ளது.
சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., தொண்டர் ஜோசப் தாக்கல் செய்த மனுவில், 'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது; இந்த சந்தேகம், கட்சி தொண்டர்கள் மத்தியில் உள்ளது. எனவே, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூலம், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
'ஜெயலலிதா மரணம் குறித்து, சி.பி.ஐ., மற்றும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை நியமித்து விசாரிக்க வேண்டும்; அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள், மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்' என, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த, ஞானசேகரனும் மனு தாக்கல் செய்தார்.
மூன்று மனுக்களும், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன. ஜோசப் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜயன்; ஞானசேகரன் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி; அரசு தரப்பில்,அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி; அப்பல்லோ மருத்துவமனை சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகினர்.
வழக்கறிஞர் விஜயன்:ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது; அவரது கால்கள் துண்டிக்கப்பட்டதாக கூறுகின்றனர்; மக்கள், இது குறித்து கவலை கொள்கின்றனர். மருத்துவமனையில் இருந்து வெளியான அறிக்கைகள் தவிர, அவரது உடல் நிலை குறித்து, அரசு எந்த விபரங்களையும் வெளியிடவில்லை.
தலைமை நீதிபதி: எந்த அடிப்படையில், இதை கூறுகிறீர்கள்; எல்லாம் முடிந்து விட்டது; இப்போது வருத்தப்பட வேண்டியதில்லை.
வழக்கறிஞர் காந்தி:மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது, அவரை பார்க்க, கவர்னரை கூட அனுமதிக்கவில்லை.
வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்:ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் அடங்கிய அறிக்கை, மருத்துவமனை வசம் தயாராக உள்ளது. அதை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம். ஜெயலலிதா மரணத்தில், எந்த மர்மமும் இல்லை.
இதையடுத்து, தலைமை நீதிபதி கூறியதாவது:
இந்த வழக்கில், மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டியதுள்ளது. ஒன்று, இந்தப் பிரச்னையை எழுப்ப, வழக்கு தொடுத்தவர்களுக்கு தகுதி உள்ளதா; ஜெயலலிதாவின் உறவினர்கள் யாரும், வழக்கு எதுவும் தொடரவில்லை.
இந்த வழக்கில், மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டியதுள்ளது. ஒன்று, இந்தப் பிரச்னையை எழுப்ப, வழக்கு தொடுத்தவர்களுக்கு தகுதி உள்ளதா; ஜெயலலிதாவின் உறவினர்கள் யாரும், வழக்கு எதுவும் தொடரவில்லை.
இரண்டாவதாக, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து, குறிப்பிட்ட சந்தேகங்கள் எதுவும் உள்ளதா என்பது தெரிய வேண்டும். மூன்றாவதாக, அரசு பதவியில் இருந்த ஒருவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை, பொது தளத்தில் எந்த அளவுக்கு வெளியிட முடியும்; நோயாளி பற்றியது என்பதால், மருத்துவமனைக்கும் தர்மசங்கடமான நிலை உள்ளது.இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.
தள்ளி வைப்பு
இதையடுத்து, இந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை எனக் கூறிய நீதிபதிகள், விசாரணையை, பிப்., 23க்கு தள்ளி வைத்தனர்.
டிராபிக் ராமசாமி மனுவை தள்ளுபடி செய்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: ஒரே விஷயத்துக்காக, பல மனுக்களை விசாரணைக்கு ஏற்பதில் அர்த்தமில்லை. மேலும், இந்த மனுவில் விரிவான விபரங்களும் இல்லை. மறைந்த முதல்வருக்கு எதிரான நிலையை, மனுதாரர் தொடர்ந்து எடுத்து வந்த நிலையில், அவரது மரணம் குறித்து, இப்போது அக்கறை கொள்வது புதிராக உள்ளது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...