வறட்சியால் தொடரும் உயிர் பலி
5
....
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் வறட்சி காரணமாக விவசாயிகள் பலியாவது தொடர்ந்து வருகிறது. இன்று 5 பேர் பலியாகியுள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள அரசாள மங்கலத்தை சேர்ந்த விவசாயி முருகேசன்,55. இவருக்கு மனைவி, 3 மகன், 3 மகள் உள்ளனர். இவர் தனது வயலுக்கு பம்பு செட் மூலம் சாகுபடி செய்து வந்தார். ஆனால், நிலத்தடி நீர்மட்டம் குறைய துவங்கியதால், போதிய தண்ணீர் வரவில்லை. இதனால் பயிர்கள் கருக துவங்கியதில் அதிர்ச்சியடைந்த முருகேசன், மாரடைப்பால் காலமானார்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அய்யடிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம், 55. தனது 3 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்திருந்தார். போதிய தண்ணீர் இல்லாதாதல் பயிர்கள் கருக துவங்கின. இதனால் வயலில் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து பலியானார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம் அதனூரை சேர்ந்தவர் மகாலிங்கம்,55. இவர் 2 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிர் செய்திருந்தார். போதிய தண்ணீர் இல்லாததால், வயல் காய துவங்கியது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மகாலிங்கம் கவலையில் ஆழ்ந்தார். வயலில் மயங்கி விழுந்து அவர் பலியானார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள ஆழங்காத்தான் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழன், 62. இவர் 4 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தார். போதிய மழை இல்லாததால், நெற்பயிர்கள் கருகின. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் , வயலில் சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள கே.பாறைப்பட்டியைசேர்ந்த அப்பையா என்ற விவசாயியும் பயிர்கள் வாடிய சோகத்தில் மாரடைப்பால் பலியானார்.

No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...