மருந்து சீட்டுகளை கைகளால் எழுத டாக்டர்களுக்கு தடை
தாகா : வங்கதேசத்தில், டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் தங்கள் கைகளால் எழுதக்கூடாது. மருந்து விவரங்களை டைப் அடித்து கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் எழுதி கொடுக்கும் மருந்துகளின் பெயர்கள் என்னவென்றே தெரியாத அளவிற்கு அவர்களின் கையெழுத்து உள்ளது. இதனால் மருந்து கடைக்காரர்களுக்கும் மருந்துகளின் பெயர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து வங்கதேச கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‛இனி டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் தங்கள் கைகளால் எழுதக்கூடாது. மருந்து விவரங்களை டைப் அடித்து கொடுக்க வேண்டும்.அதையும் மீறி எழுத வேண்டிய கட்டாயம் இருந்தால் மருந்து விவரங்களை ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளாக எழுத வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
மேலும் சுகாதார துறையினர் இதை கண்காணித்து 3 மாதத்துக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...