விஜய் நடிப்பில் வெளிவந்த ‘ப்ரண்ட்ஸ்’, ‘பகவதி’, ‘வசீகரா’, ‘மதுர’, ‘சச்சின்’, ‘போக்கிரி’, ‘வில்லு’, ‘சுறா’, ‘காவலன்’ ஆகிய படங்களில் வடிவேலு காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் வடிவேலு காமெடிக்காகவே பெரிய அளவில் பேசப்பட்டன.
சமீபகாலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த வடிவேலு, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், விஜய் ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளார். சமீபத்தில் வடிவேலுவை சந்தித்த அட்லி, விஜய் படத்தின் கதையை அவரிடம் கூறியுள்ளார். கதை பிடித்துப்போன வடிவேலு அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை வடிவேலுவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த படம் விஜய் – வடிவேலு இணையும் 10-வது படமாகும். இப்படத்தில் ஏற்கெனவே, நான் கடவுள் ராஜேந்திரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஷ்ணு என்பவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். ரூபன் எடிட்டிங் பணிக்கு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
வடிவேலு நடிப்பில் ‘கத்திசண்டை’ படம் வருகிற டிசம்பர் 23-ந் தேதி வெளிவரவிருக்கிறது. இப்படத்தில் விஷால், தமன்னா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர், சுராஜ் இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...