சாம்சங் நிறுவனம் அதன் சமீபத்திய பதிப்புகளாகிய கேலக்ஸி ஏ (2017) தொடரின் கேலக்ஸி ஏ3, (2017) மற்றும் கேலக்ஸி ஏ5 (2017) ஸ்மார்ட்போன்களின் விலையை உறுதி செய்து அறிவித்துள்ளது.
2017- ஆம் ஆண்டு தான் சாம்சங் நிறுவனத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகிறது. பேட்டரி வெடிப்பு சம்பவங்களில் சிக்கி விமான பிரயாணத்தின் போது தடை செய்யப்படும் அளவு 'வெடிகுண்டு' உற்பத்தி செய்யும் நிறுவனம் என்று தனக்கான பிராண்ட் பெயரை கடந்த 2016-ஆம் ஆண்டு சாம்சங் கெடுத்துக் கொண்டதை நாம் அனைவரும் அறிவோம்.
அப்படியாக குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு சாம்சங் நிறுவனம் அதன் சமீபத்திய பதிப்புகளாகிய கேலக்ஸி ஏ (2017) தொடரின் கேலக்ஸி ஏ3, (2017) மற்றும் கேலக்ஸி ஏ5 (2017) ஸ்மார்ட்போன்களின் விலையை உறுதி செய்து அறிவித்துள்ளது. அப்படியாக, எந்தெந்த கருவிகளுக்கு என்னென்ன விலை, என்னென்ன அம்சங்கள் என்பதை பற்றிய தொகுப்பே இது.
விலை
கேலக்ஸி ஏ (2017) தொடரின் கேலக்ஸி ஏ3, (2017) மற்றும் கேலக்ஸி ஏ5 (2017) ஸ்மார்ட்போன்கள் முறையே சுமார் ரூ. 23,500/- மற்றும் சுமார் ரூ.30,600/- என்ற விலைக்கு (ஐரோப்பியா) விற்கப்படவுள்ளது. சாம்சங் நிறுவனம் இந்த ஏ தொடரின் கீழ், கேலக்ஸி ஏ3, (2017), கேலக்ஸி ஏ5 (2017), மற்றும் கேலக்ஸி ஏ7 (2017) என்ற அதன் மூன்று புதிய கருவிகளை சிஇஎஸ் 2017-ல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தைகளில்
இந்நிலையில் சாம்சங் ஏ தொடரில் இருந்து இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை உறுதிசெய்யப்பட்டுள்ள போதிலும் கேலக்ஸி ஏ7 (2017) அக்கருவி சாம்மொபைல் அறிக்கையின் படி இந்த பகுதியில் (ஐரோப்பியா) தொடங்கப்படாது என்று அறியப்படுகிறது. ஏ தொடரின் அனைத்து மூன்று ஸ்மார்ட்போன்களும் மற்ற சந்தைகளில் கிடைக்க மேற்கொள்ளபப்டும் முன்பே ரஷ்யாவில் ஜனவரி மாத தொடக்கம் முதல் கிடைக்க செய்யப்படும்.
கேமரா
இந்த தென் கொரிய நிறுவனம் சமீபத்திய கேலக்ஸி ஏ தொடர் கருவிகளில் முந்தைய கருவிகளுடன் ஒப்பீடுகையில் "மேம்பட்ட" கேமராக்கள், குறிப்பாக குறைந்த ஒளி நிலைமைகளில் உகந்ததாக இருக்கும் என்று கூறியுள்ளது. உடன் அனைத்து மூன்று போன்களுமே ஒரு ஈர்க்கக்கூடிய ஐபி68 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு அம்சத்துடன் வெளியாகும் மற்றும் அதன் தலைமை ஸ்மார்ட்போன்களை அழகூட்டும் பிரீமியம் வடிவமைப்புடன் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேமிப்பு, கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப் சி
இந்த புதிய கருவிகள் அனைத்தும் மைக்ரோ அட்டைகள் வழியாக சேமிப்பு விரிவாக்க (256ஜிபி வரை) ஆதரவு, ஒரு கைரேகை ஸ்கேனர் முகப்பு பட்டன், அதே போல் வேகமாக சார்ஜ் செய்யும் ஆதரவு, யுஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவைகளும் இடம்பெறுகின்றன. சாம்சங் கேலக்ஸி ஏ3, (2017), கேலக்ஸி ஏ5 (2017), மற்றும் கேலக்ஸி ஏ7 (2017) ஆகிய கருவிகள் பிளாக் ஸ்கை, கோல்ட் சாண்ட், ப்ளூ மிஸ்ட், மற்றும் பீச் கிளவுட் ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கின்றன.
சாம்சங் கேலக்ஸி ஏ3 (2017) பிரதான அம்சங்கள்
டிஸ்ப்ளே : 4.70 இன்ச்
செயலி : 1.6ஜிகாஹெர்ட்ஸ் அக்டா கோர்
முன்பக்க கேமரா : 8 மெகாபிக்சல்
தீர்மானம் : 720x1280 பிக்சல்கள்
ரேம் :2ஜிபி
ஓஎஸ்: ஆண்ட்ராய்டு 6.0
சேமிப்பு : 16ஜிபி
பின்புற கேமரா : 13 மெகாபிக்சல்
பேட்டரி திறன் : 2350எம்ஏஎச்
செயலி : 1.6ஜிகாஹெர்ட்ஸ் அக்டா கோர்
முன்பக்க கேமரா : 8 மெகாபிக்சல்
தீர்மானம் : 720x1280 பிக்சல்கள்
ரேம் :2ஜிபி
ஓஎஸ்: ஆண்ட்ராய்டு 6.0
சேமிப்பு : 16ஜிபி
பின்புற கேமரா : 13 மெகாபிக்சல்
பேட்டரி திறன் : 2350எம்ஏஎச்
சாம்சங் கேலக்ஸி ஏ5 (2017) பிரதான அம்சங்கள்
டிஸ்ப்ளே : 5.20 அங்குலம்
செயலி : 1.9ஜிகாஹெர்ட்ஸ் அக்டா கோர்
முதன்மை கேமரா : 16 மெகாபிக்சல்
தீர்மானம் :1080x1920 பிக்சல்கள்
ரேம் :3ஜிபி
ஓஎஸ் : ஆண்ட்ராய்டு 6.0
சேமிப்பு : 32 ஜிபி வரை
பின்புற கேமரா :16 மெகாபிக்சல்
பேட்டரி : 3000 எம்ஏஎச்
செயலி : 1.9ஜிகாஹெர்ட்ஸ் அக்டா கோர்
முதன்மை கேமரா : 16 மெகாபிக்சல்
தீர்மானம் :1080x1920 பிக்சல்கள்
ரேம் :3ஜிபி
ஓஎஸ் : ஆண்ட்ராய்டு 6.0
சேமிப்பு : 32 ஜிபி வரை
பின்புற கேமரா :16 மெகாபிக்சல்
பேட்டரி : 3000 எம்ஏஎச்
சாம்சங் கேலக்ஸி ஏ7 (2017) பிரதான அம்சங்கள்
டிஸ்ப்ளே : 5.70 அங்குலம்
செயலி : 1.9ஜிகாஹெர்ட்ஸ் அக்டா கோர்
முன்பக்க கேமரா : 16 மெகாபிக்சல்
தீர்மானம் : 1080x1920 பிக்சல்கள்
ரேம் : 3ஜிபி
ஓஎஸ் : ஆண்ட்ராய்டு 6.0
சேமிப்பு : 32 ஜிபி வரை
பின்புற கேமரா : 16 மெகாபிக்சல்
பேட்டரி திறன் : 3600எம்ஏஎச்
செயலி : 1.9ஜிகாஹெர்ட்ஸ் அக்டா கோர்
முன்பக்க கேமரா : 16 மெகாபிக்சல்
தீர்மானம் : 1080x1920 பிக்சல்கள்
ரேம் : 3ஜிபி
ஓஎஸ் : ஆண்ட்ராய்டு 6.0
சேமிப்பு : 32 ஜிபி வரை
பின்புற கேமரா : 16 மெகாபிக்சல்
பேட்டரி திறன் : 3600எம்ஏஎச்
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...